iQOO 15R இந்திய விலை லீக் ஆன வேகத்தில் OnePlus 15R விலை குறைப்பு!
ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஆனது ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்கிற தகவல், ஆன்லைனில் லீக் ஆன வேகத்தில், ஒன்பிளஸ் 15ஆர் மாடலின் விலை கொஞ்சம் குறைக்கப்பட்டு உள்ளது.
ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனுக்காக உருவாக்கப்ட்டுள்ள பிரத்யேக மைக்ரோசைட்டில் - இது ரூ.55,000 க்கும் குறைவான விலைப்பிரிவில் வாங்க கிடைக்கும் மிகவும் வேகமான ஸ்மார்ட்போன் (Fastest smartphone under Rs.55,000 price segment) ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது கடந்த டிசம்பர் 2025 இல் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 15ஆர் உடன் நேரடியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 15ஆர் அசல் விலை மற்றும் பிளிப்கார்ட் ஆபர் விலை: அறிமுகத்தின் போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.47,999 ஆக இருந்தது, ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.46,981 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 15ஆர் டிசைன்: டிசைனை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங், இதை லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கிறது. கேமரா மாட்யூல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது, பழைய ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் உள்ள வட்ட வடிவிலான கேமரா செட்டப் ஆனது, ஒன்பிளஸ் 15ஆர் மாடலில், மேல்-இடதுபுறத்தில் அமைந்துள்ள ஒரு சதுர வடிவ கேமரா செட்டப்பாக மாறியுள்ளது.
கேமரா மாட்யூலின் உள்ளே இரண்டு லென்ஸ்கள் உள்ளன; அவைகள் செங்குத்தாக பில்-ஸ்டைல் வடிவமைப்பில் பேக் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஃபிளாஷ் யூனிட் ஆனது வெளிப்புறமாக அமைந்துள்ளது. ஒன்பிளஸ் 5ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஆடம்பர உணர்வையும், பணிச்சூழலியலையும் மேம்படுத்தும் பிரீமியம் கிளாஸ் பேக்கையும் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 15ஆர் டிஸ்பிளே: ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே அமோல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் ஆகிய டிஸ்பிளே அம்சங்களும் உள்ளன.
ஒன்பிளஸ் 15ஆர் சிப்செட்: ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை இயக்குவது குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் ஆகும். 3என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட இந்த உயர்நிலை சிப்செட் ஆனது சிபியு, ஜிபியு மற்றும் சிறந்த வேகம் மற்றும் ஆற்றல் மேலாண்மை உள்ளிட்ட பொதுவான செயல்திறனில் குறிப்பிடத்தக்க ஆதாயங்களை வழங்குகிறது.
ஒன்பிளஸ் 15ஆர் கேமரா: இமேஜிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் OIS ஆதரவு உடனான 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா உள்ளது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 32MP செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செய்யப் 30fps மற்றும் 120fps இல் 4கே வீடியோ பதிவை ஆதரிக்கிறது.
ஒன்பிளஸ் 15ஆர் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்: ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 7400mAh என்கிற மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இது - இதுவரை எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இல்லாத மிகப்பெரிய பேட்டரி கெப்பாசிட்டி ஆகும். இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பைபாஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 15ஆர் ஓஎஸ் மற்றும் ஐபி ரேட்டிங்: ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் 16 (OxygenOS 16) கொண்டு இயங்குகிறது. ஐபி ரேட்டிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது உயர்மட்ட IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்களை பெற்றுள்ளது. இது தூசி மற்றும் தண்ணீரிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








