நவ.13 அறிமுகம்.. 7800mAh பேட்டரி, 120W சார்ஜிங், IP69, 16GB ரேம்.. பக்கா பட்ஜெட்டில் புது OnePlus போன்!
ஒன்பிளஸ் 15 (OnePlus 15) உடன் சேர்ந்து ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 27 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 15, வருகிற நவம்பர் 13 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக சீனாவில் ஒன்பிளஸ் 15 உடன் சேர்ந்து அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஸ்மார்ட்போன் ஆனது, இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 15ஆர் என்கிற பெயரின் கீழ் ரீபிராண்டிங் செய்யப்படும் என்றும், இதுவும் அதே நவம்பர் 13 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து அதன் ஒன்பிளஸ் ஆர் மாடல்களை அறிமுகப்படுத்தி வருவதால், அதையே இம்முறையும் பின்பற்றலாம் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. சரி ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? இது என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் 15ஆர் அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் 15ஆர் ஆனது ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் ரீபிராண்டிங் வெர்ஷன் ஆக இருக்கும், அதாவது ஒரே அம்சங்களுடன் வெவ்வேறு மாடல் பெயர்களின் கீழ் அறிமுகமாகும். சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் 16 கொண்டு இயங்குகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 165Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.83-இன்ச் 1.5கே (1272 x 2800 பிக்சல்கள்) பிளாட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே 3டி பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் கண்-பாதுகாப்பிற்கான அம்சங்களும் உள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது, இது 16ஜிபி வரை LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ்-ஹெவி பணிகளை கையாள ஜி2 கேமிங் சிப்பும் உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு 16-மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனானது 7800mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் விலைப்பிரிவில் இதுவொரு மிகப்பெரிய பேட்டரி என்று கூறப்படுகிறது. இது 120W பாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆனால் ஒன்பிளஸ் 15 மாடலில் இருப்பதை போல வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இதில் இல்லை.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்: இது தூசி மற்றும் நீர் ஊடுருவலுக்கு எதிரான பாதுகாப்பிற்காக ஐபி66 + ஐபி68 + ஐபி69 + ஐபி69கே ரேட்டிங்களை கொண்டுள்ளது. இது ஒரு பிளஸ் கீ உடன் வருகிறது. இது ரிங் மோட்களுக்கு இடையில் மாற பயன்படுகிறது. இது கஸ்டமைஸ் செய்யலாம்" கேமராவை திறப்பது, ஸ்க்ரீனில் உள்ள டெக்ஸ்ட்டை மொழிபெயர்ப்பது அல்லது ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்வது போன்ற பணிகளையும் செய்யலாம்.
ஒன்பிளஸ் 15ஆர் விலை: சீனாவில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.32,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதே போன்ற விலையை நாம் இந்திய சந்தையில் எதிர்பார்க்க முடியாது. ஒன்பிளஸ் 15ஆர் ஆனது இந்தியாவில் ரூ.40,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகமாகலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.44,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








