Home
Mobile

டிச.17 மார்க்கெட்ல இருக்குற எல்லா போனுக்கும் கச்சேரி.. 7400mAh பேட்டரி புது OnePlus போன்.. அட்ரா சக்கை விலை!

லேட்டஸ்ட் ஆக ரூ.72,999 க்கு இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடல் உங்களுடைய பட்ஜெட்டிற்கு ஏற்றபடி இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். ஒன்பிளஸ் நிறுவனம் அதே ஒன்பிளஸ் 15 சீரிஸின் கீழ் ஒரு புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை - இன்னும் சில தினங்களில் - அறிமுகம் செய்ய உள்ளது!

அது ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போன் ஆகும். இது வருகிற டிசம்பர் 17, 2025 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நாள் (OnePlus 15R India Launch Date) நெருங்கிக்கொண்டே வருவதால், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தி வருகிறது.

டிச.17 கச்சேரி.. 7400mAh பேட்டரி புது OnePlus போன்!

அப்படியாக தற்போது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 7400mAh பேட்டரியுடன் வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதனுடன், இந்த ஸ்மார்ட்போன் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை (1.5K AMOLED Display) கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இது ஒரு சிறந்த மிட்-ரேன்ஜ் போனாக நிலைநிறுத்தப்படும்.

இதுகுறித்த அறிவிப்பில் - ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய 7400mAh பேட்டரி ஆனது 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங்கால் ஆதரிக்கப்படும் என்றும், 4 ஆண்டுகளுக்குப் பிறகும் இது குறைந்தது 80% க்கும் அதிகமான திறனை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் ஒன்பிளஸ் பிராண்ட் தெரிவித்துள்ளது. மேலும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனால் 4கே ரெசல்யூஷனில் வினாடிக்கு 120 பிரேம்களில் ரெக்கார்ட் செய்ய முடியும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது உண்மையாகும் பட்சத்தில் இந்த சிப்செட்டை கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும். சுவாரசியமாக ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது பிளஸ் மைண்டிற்கான (Plus Mind) ஆதரவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 15ஆர் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் (OnePlus 15R Price in India Expected)? நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில், ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.42,999 க்கு அறிமுகமானது. ஆக பெரும்பாலும் ஒன்பிளஸ் 15ஆர் ஆனது ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.44,999 அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் (OnePlus 13R Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15R 7400mAh battery 165Hz AMOLED Display confirmed Ahead India launch on December 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X