Home
Mobile

முரட்டு காம்பினேஷன் உடன் புது OnePlus போன்.. 120W வயர்டு, 50W வயர்லெஸ் சார்ஜிங் உடன் 7300mAh பேட்டரி!

வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் "பேட்டரி டிபார்ட்மென்ட்" ஆனது முரட்டுத்தமான காம்பினேஷனால் ஆன அம்சங்களை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. என்ன மாடல்? அப்படி என்ன அம்சங்கள்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

அக்.27 அறிமுகமாவது ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனாகும். இது கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13 மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆகும். இது அக்டோபர் 27 ஆம் தேதி சீனாவிலும், அதை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தைக்கான லீக்டு லான்ச் டேட் நவம்பர் 13 ஆகும்.

புது OnePlus போன்.. 100W வயர்டு, 50W வயர்லெஸ், 7300mAh பேட்டரி!

அறிமுக நாள் "நெருங்க நெருங்க" - ஒன்பிளஸ் நிறுவனமானது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி வருகிறது. அப்படியாக ஒன்பிளஸ் 15-ன் டிசைன், சிப்செட் மற்றும் கலர் ஆப்ஷன்களை தொடர்ந்து, பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 100W வயர்டு சூப்பர் பிளாஷ் சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரி இருக்கும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது அதன் முன்னோடியை (ஒன்பிளஸ் 13 மாடலை) விட குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் ஆகும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13-ல் 6000mAh பேட்டரி உள்ளது.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? விலையை பொறுத்தவரை, இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போண்ணின் விலை ரூ.70,000 முதல் ரூ.75,000 வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்கலாம்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது? ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் டிசைன் ஆனது நாம் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் பார்த்ததை போலவே இருக்கிறது. அதாவது காம்பாக்ட் பிளாக்ஷிப் (மினி) ஸ்மார்ட்போன் டிசைனை பெறுகிறது. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது சாண்ட் ஸ்டார்ம், அப்சலூட் பிளாக் மற்றும் மிஸ்டி பர்பிள் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது பிஓஇ-யின் மூன்றாம் தலைமுறை ஓரியண்டல் டிஸ்பிளே (BOE's third-generation Oriental Display) உடனான உலகின் முதல் 165 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்க்ரீனை (165Hz OLED screen) கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகமாக உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் - ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முதல் அம்சமாக, அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது - ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் தான். ஏனென்றால் இதே சிப்செட் உடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ மற்றும் ஐக்யூ 15 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். அதில் 85மிமீ சமமான குவிய நீளம், எப்/2.8 துளை மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் திறன் கொண்ட 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறலாம், இதோடு 50 மெகாபிக்சல் ப்ரைமரி மற்றும் 50 மெகாபிக்சல் செகண்டரி ரியர் கேமராக்களையும் கொண்டிருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 With 7300mAh Battery with 120W Super Flash Charge Launching On October 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X