Home
Mobile

மொத்த சாம்ராஜ்யம் ஒரு OnePlus-க்கு வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 165Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்யும்படி அந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் பீச்சர்கள் குறித்த விவரங்கள் கசிந்து வருகின்றன. ஏற்கனவே, சிப்செட், கேமரா, பேட்டரி போன்ற பீச்சர்கள் கசிந்தன. இப்போது, டிஸ்பிளே பீச்சர்கள் கசிந்து, எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

இந்திய மட்டுமல்லாமல், உலகளவில் இருக்கும் ஸ்மார்ட்போன் பிரியர்கள் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனுக்காக காத்திருக்கின்றனர். அக்டோபர் மாதம் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெளியீட்டு விவரங்கள் கசிந்த போதே ஸ்குவார் கேமரா டிசைனுடன் (Square Camera Design) இது வெளியாகும் என்று கூறப்பட்டது.

மொத்த சாம்ராஜ்யம் ஒரு OnePlus-க்கு வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி!

ஆகவே, இந்தியாவில் ஏற்கனவே வெளியான ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனில் கிடைத்த கேமரா டிசைன் போலவே இதிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 சிப்செட் போன்ற பீச்சர்கள் கசிந்து, இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தின.

இப்போது, ஒட்டுமொத்த கேமிங் ஸ்மார்ட்போன்களையும் தூக்கி சாப்பிடும்படி 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 165FPS கேமிங் அவுட்புட் கொடுக்கும் டிஸ்பிளேவுடன் வெளியாகும் என்று டிஸ்பிளே பீச்சர்கள் கசிந்துள்ளது. இதுபோக 1.5K ரெசொலூஷன் கொடுக்கும் ஸ்மாடர்போனாகவும் இந்த ஒன்பிளஸ் 15 இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முழு பீச்சர்கள் எப்படி இருக்கிறது.

ஒன்பிளஸ் 15 அம்சங்கள் (OnePlus 15 Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite) அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Qualcomm Snapdragon 8 Elite 2) ஆகிய சிப்செட்களில் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கலாம். பிளாட் டிசைனில் 6.78 இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது.

இதுவொரு மிட்-பிரீமியமாக மாடலாக இருக்கப் போகிறது. ஆகவே, பிஓஇ (BOE) டிஸ்பிளேவாக எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளேவில் கேமிங் பிரியர்களுக்கான அல்ட்ரா-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்க 165Hz ரெஃப்ரெஷ் ரேட், 165FPS கேமிங் அவுட்புட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. இந்த கேமிங் அவுட்புட்டுக்கு ஏற்ப பேட்டரி கேபாசிட்டி வர இருக்கிறது.

ஆகவே, இந்த ஒன்பிளஸ் 15 போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7,000mAh பேட்டரி மட்டுமலலாமல், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்க இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபேட்டோ கேமரா வர இருக்கிறது.

இந்த டெலிபோட்டோவில் 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்க இருக்கிறது. முன்பே சொன்னதை போல ஸ்குவார் கேமரா டிசைன் கிடைக்க இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 15 போனில் மூன் ராக் பிளாக் (Moon Rock Black) கலர் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. அக்டோபர் மாதம் வெளியாக இருந்தாலும் தேதி குறிப்பிடப்படவில்லை.

அதேபோல முதலில் சீன மார்கெட்டில் இந்த ஒன்பிளஸ் 15 வெளியாக இருக்கிறது. அதன்பிறகு இந்தியா உள்பட மற்ற மார்கெட்களில் எதிர்பார்க்கலாம். ஒன்பிளஸ் 13டி மாடல் முதலில் சீனாவில் வெளியானது. அதன்பிறகு கலர் வேரியண்ட்களில் மாற்றம் செய்யப்பட்டு, இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் மாடலாக கிடைத்தது. இதேபோல ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 With 165Hz Refresh Rate Display Leaked Expected To Launch in October in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X