Home
Mobile

OnePlus ஒரே போடு.. ரூ.4,000 ஆஃபரில் 120W சார்ஜிங்.. 7300mAh பேட்டரி.. SONY கேமரா.. 12GB ரேம். எந்த மாடல்?

அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேலில் (Amazon Great Freedom Sale) ஒன்பிளஸ், ஐக்யூ, ஓப்போ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7300mAh பேட்டரி கொண்ட ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.85,999 ஆக இருக்கிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் வழியாக ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கு ரூ.4,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஈஎம்ஐ அல்லாமல் கிரெடிட் கார்டுகள் வழியாக வாங்கினால், ரூ.3,500 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

OnePlus ஒரே போடு.. ரூ.4,000 ஆஃபரில் 120W சார்ஜிங்.. 7300mAh பேட்டரி!

ஒன்பிளஸ் 15 அம்சங்கள் (OnePlus 15 Specifcations): 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Vicus 2) புரொடெக்சன் கொடுத்துள்ளது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கொடுக்கப்பட்டு இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமராவை இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

ஓம்னிவிஷன் ஓவி50டி (Omnivision OV50D) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 3.5X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்டுள்ளது. 8K வீடியோ ரெக்கார்டிங் + டால்பி விஷன் ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கும் மாடலாக இருக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சாருடன் 32 எம்பி ஆர்ஜிபிடபுள்யூ செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன. கார்னிங் கொரில்லா கிலாஸ் விக்டஸ் 2 மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பாடிக்கும் பிரீமியம் டியூரபிட்டி கொடுக்கும்படி IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பெரிய 7300mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0), வை-பை 7 (Wi-Fi 7) கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் பிளாக், வயலெட் மற்றும் சாண்ட் ஸ்டார்ம் ஆகிய மூன்று கலர்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 15 With 12GB RAM Available At Rs 4000 Discount on Amazon Great Freedom Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X