இது நம்ம லிஸ்ட்லயே இல்லீயே.. OPPO கேமராவுடன் புது OnePlus போன்.. மார்க்கெட்டின் பெஸ்ட் கேமரா போன்!
ஒன்பிளஸ் நிறுவனமானது ஒரு புதிய அத்தியாயத்தில் குதித்துள்ளது. ஏற்கனவே - பிஓஇயின் தேர்ட் ஜெனரேஷன் ஓரியண்டல் டிஸ்பிளே உடனான உலகின் முதல் 165 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்க்ரீனை கொண்ட ஸ்மார்ட்போன் என்றும்.. 120W வயர்டு, 50W வயர்லெஸ் சார்ஜிங் உடன் 7300mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் என்றும் - ஹைப் எகிறியுள்ளது.
இதற்கிடையில் வருகிற அக்டோபர் 23 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படவுள்ள ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் கேமரா சிஸ்டமிலும் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை வெறுமனே மாற்றம் என்று குறிப்பிடாமல், ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒரு புதிய அத்தியாயம் என்றே கூறலாம்.

ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லி ஜி, தனது சமூக ஊடகப்பதிவின் மூலம், ஒன்பிளஸ் 15 ஆனது ரோபோவின் லுமோ இமேஜிங் சிஸ்டமை அறிமுகப்படுத்தும் என்றும், இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் கீழ் அறிமுகமான மிகவும் மேம்பட்ட போட்டோகிராஃபி ஃபோகஸ்டு போன் (Most advanced photography-focused phone) ஆக நிலைநிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் ஹசல்பிளாட் (Hasselblad) உடனான கூட்டாண்மையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது
ஒப்போ லுமோ இமேஜிங் சிஸ்டமில் அப்படி என்ன ஸ்பெஷல்? இது ஒப்போ குழுமத்திற்குள் மிக உயர்ந்த அளவிலான இமேஜிங் தொழில்நுட்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக லி கூறியுள்ளார். இதன்மூலம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது "ஒன்பிளஸ் பிராண்டின் வரலாற்றிலேயே" சிறந்த புகைப்பட செயல்திறனை வழங்கும் என்றும், இது டெப்த், லைட் மற்றும் கலர் நம்பகத்தன்மையை மையமாக கொண்டது என்றும் லி கூறியுள்ளார்
ஹசல்பிளாட் உடனான கூட்டாண்மை முடிவுக்கு வந்தாலும் கூட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் இந்த புதிய கேமரா சிஸ்டம் ஆனது கலர் பிலாஸபி, ஆஸ்தெட்டிக் டோன் மற்றும் மாஸ்டர் மோட் மற்றும் வைட் ஆஸ்பெக்ட் ரேஷியோ போன்ற முக்கிய கேமரா மோட்களை தக்கவைக்கும் என்றும், இது ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சிக்னேச்சர் விஷூவல் எக்ஸ்பீரியன்ஸை அப்படியே வைத்திருப்பதை உறுதி செய்யும் என்றும் லி விளக்கம் அளித்துள்ளார்.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 50எம்பி ட்ரிபிள் கேமரா சிஸ்டம் இடம்பெறும். இதில் 85மிமீ கோல்டன் போர்ட்ரெய்ட் குவிய நீளத்திற்கு சமமான 3.5எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸும் அடங்கும். இது ப்ரோ எக்ஸ்டிஆர், புல் போக்கல்-ரேன்ஜ் ஹை-டெபினிஷன் அவுட்புட், 4கே 120எப்பிஎஸ் டால்பி விஷன் ரெக்கார்ட் மற்றும் அல்ட்ரா-கிளியர் லைவ் போட்டோக்களுடன் மேம்பட்ட இமேஜ் ப்ராசஸிங் செட்டப்பை ஆதரிக்கிறது.
ஒன்பிளஸ் 15 மாடலின் மூன்று 50எம்பி கேமராக்களை பற்றிய லீக்ஸ் விவரங்களை பொறுத்தவரை - ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் ஓஐஎஸ் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் சோனி LYT-700 பிரைமரி கேமராவையும், 50 மெகாபிக்சல் ஆம்னிவிஷன் OV50D அல்ட்ரா-வைட் ஸ்னாப்பர் மற்றும் 50 மெகாபிக்சல் சாம்சங் JN5 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம்.
முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகமாகும். இந்திய சந்தையில் இது வருகிற நவம்பர் 13 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படலாம் என்று ஒரு லேட்டஸ்ட் லீக் தெரிவிக்கிறது. ஆக எப்படி பார்த்தாலும் இது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும்.
விலையை பொறுத்தவரை, இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போண்ணின் விலை ரூ.70,000 முதல் ரூ.75,000 வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








