நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது OnePlus 5ஜி போன்.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ஒன்பிளஸ் நிறுவனம் நாளை (நவம்பர் 13) இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் நாளை மாலை 7 மணி அளவில் ஒன்பிளஸ் இந்தியா இணையதளம் மற்றும் YouTube சேனல் வழியாக இந்த போனின் அறிமுக நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படும்.
அதேபோல் ஒன்பிளஸ் 15 போன் அறிமுகம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் இந்த போனின் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 15 அம்சங்கள் (OnePlus 15 specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்பகளை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதுவும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த ஒன்பிளஸ் 15 போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.78-BOE X3 8T LTPO டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன். அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன் புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும்.
50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இந்த போனின் மூலம் 8கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் 7300mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த போனின் எடை 215 கிராம் ஆகும்.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ரூ.72,999-விலையிலும், இதன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.76,999-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








