Home
Mobile

நாளைக்கு லான்ச் ஆகும் புத்தம் புதிய OnePlus 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 15 போனின் அறிமுக தேதி தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இன்று வெய்போ (Weibo) தளத்தில் வெளியான ஒரு பதிவில் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) போன்கள் நாளை (அக்டோபர் 17) அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 15 போன் ஆனது நாளை சீனாவில் மட்டுமே அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலும், உலக சந்தையில் வரும் நவம்பர் 13 ஆம் தேதி இந்த ஒன்பிளஸ் 15 போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய ஒன்பிளஸ் 15 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

நாளைக்கு லான்ச் ஆகும் புத்தம் புதிய OnePlus 5ஜி போன்..  எந்த மாடல்?

ஒன்பிளஸ் 15 அம்சங்கள் (OnePlus 15 specifications): 6.78-இன்ச் 1.5கே பிஓஇ எக்ஸ்3 டிஸ்பிளே டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15 போன் அறிமுகமாகும். மேலும் டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் விவிட் (HDR Vivid), எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), 165ஹெர்ட்ஸ் 8டி எல்டிபிஓ டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், ப்ரோ எக்ஸ்டிஆர் (Pro XDR) ஆகிய டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன். அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 chipset) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன வீடியோ எடிட்டிங் ஆப்பகளை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த ஒன்பிளஸ் 15 போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன்
புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும்.

50 மெகாபிக்சல் சோனி LYT-700 24மிமீ வைட் லென்ஸ் + ஓஐஎஸ் உடன் 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 15மிமீ அல்ட்ரா-வைட் ஷூட்டர் + ஓஐஎஸ் உடன் 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 85மிமீ டெலிஃபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் ஒன்பிளஸ் 15 அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.

நாளைக்கு லான்ச் ஆகும் புத்தம் புதிய OnePlus 5ஜி போன்..  எந்த மாடல்?

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

7300mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.65,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Photo Credit: Weibo/ OnePlus

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 will be launched in china tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X