Home
Mobile

இதுக்கு தானே வெயிட்டிங்.. புது OnePlus போன்.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 24GB ரேம், OIS கேமரா!

செப்.9 ஆம் தேதி நடக்கும் ஐபோன் 17 சீரிஸ் மாடல்களுக்கு பிறகு, 2025-ல் மிகவும் "ஹைப்" ஏற்றும் ஸ்மார்ட்போன்களாக ஒன்பிளஸ் 15 சீரீஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் 15, ஒன்பிளஸ் 15ஆர் மற்றும் "மினி ஸ்மார்ட்போன்" ஆன ஒன்பிளஸ் 15டி (சீனாவில்), ஒன்பிளஸ் 15எஸ் (உலகளவில்) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த புதிய லீக் ஒன்று - இந்த ஸ்மார்ட்போனை "வெயிட் பண்ணி வாங்குறதுக்கு வொர்த்து தான்" என்று கூறவைக்கும் படியாக உள்ளது. ஏனென்றால் ஒன்பிளஸ் 15 ஆனது 3 புதிய கலர் ஆப்ஷன்களை பெற உள்ளது மற்றும் மொத்தம் 5 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வரவுள்ளது.

புது OnePlus போன்.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவல்களின்படி ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது பல ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வரும். இதில் 12ஜிபி + 256ஜிபி, 12ஜிபி + 512ஜிபி, 16ஜிபி + 256ஜிபி, 16ஜிபி + 512ஜிபி, மற்றும் 16ஜிபி + 1டிபி ஆகியவைகள் அடங்கும்.

ஆனால் இங்கே இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன்கள் தான். இது பிளாக் (Black), புதிய பர்பில் கலர் (Purple Color) மற்றும் ஷைனி டைட்டானியம் (ShinyTitanium) ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம். இவைகளில் - பிளாக் கலர் ஆப்ஷன் ஆனது "மூன் ராக் பிளாக்" ஆக இருக்கலாம்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- உயரமான டிஸ்பிளே மற்றும் பெரிய பேட்டரி ஆகியவற்றின் விளைவாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது சுமார் 215 கிராம் எடையை கொண்டிருக்கலாம்.
- இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடனான "உயரமான" 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- OIS ஆதரவுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.
- சுவாரசியமாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் ரியர் கேமரா யூனிட் ஆனது வட்ட வடிவில் இருந்து சதுரமாக மாற்றப்படலாம்.

- இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப்செட் கொண்டு இயக்கப்படலாம்
- மேலே உள்ள லீக்ஸ்-ல் குறிப்பிடப்பவில்லை என்றாலும் இது 24ஜிபி வரையிலான LPDDR5x ரேம் மற்றும் 1டிபி வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வரலாம்.
- 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய மிகப்பெரிய 7,000mAh பேட்டரியை பேக் செய்யலாம்

புதிய அறிமுகம் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போன் உடன் சேர்த்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) டேப்லெட்டின் இந்திய விற்பனை தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு, ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட்டின் இந்திய விலை விற்பனைக்கு வரும் நாளில் (செப்டம்பர் 5) தான் வெளியிடப்படும். இது 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற 2 வேரியண்ட்களில், ஃப்ரோஸ்டட் சில்வர் மற்றும் ஸ்டார்ம் ப்ளூ ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரும். இது பெரும்பாலும் ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 to Pack Snapdragon 8 Elite 2 Chipset Get New Color Options Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X