Home
Mobile

மொத்தமா இறங்குது.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. 16GB ரேம் மட்டுமில்ல.. OnePlus 15-க்கு புது கேமரா வருது!

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான பீச்சர்களுடன் ஒன்பிளஸ் 15 களமிறங்க இருக்கிறது. 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், இப்போது புதிய கேமரா என்ஜினை கொண்டு வருகிறது. முந்தைய மாடல்களில் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் கிடைத்தது. இனிமேல் டீடெயில்மேக்ஸ் என்ஜின் (DetailMax Engine) கிடைக்க இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனில் இருந்து அது மாற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் கசிய தொடங்கிய பிறகு கேமரா சிஸ்டமும் மாற்றப்பட இருப்பதாவும் தகவல்கள் கசிந்தன. இப்போது, அதிகாரப்பூர்வமாக அது உறுதியாகிவிட்டன.

மொத்தமா இறங்குது.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. மட்டுமில்ல!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பீட் லாவ் அவரது கம்யூனிட்டி போஸ்ட் மூலமாக இதை உறுதிபடுத்தி இருக்கிறார். பிரீமியம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் கேமராவில் ஹசல்பிளாட் சிஸ்டம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது, அதுவே தூக்கப்படுகிறது என்றால், அதைவிட தரமான கேமரா சிஸ்டம் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதாவது, ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் மற்றொரு நிறுவனமாகும். ஆனால், இப்போது சேர்க்கப்பட இருக்கும் டீடெயில்மேக்ஸ் என்ஜினானது, ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாக இருக்கப் போகிறது. இந்த டீடெயில்மேக்ஸ் என்ஜின் ஆனது கிளாரிட்டி மற்றும் ரியலிசம் ஆகியவைற்றை அடிப்படையாக கொண்டிருக்கும்.

ஆகவே, ஜூமிங் செய்தாலும், அது நேச்சுரலாக இருக்கும். ஆர்டிபிசியலாக ஒரு போட்டோவை என்ஹான்ஸ் செய்யாமல், அட்வான்ஸ் காம்ப்யூடேஷனல் இமேஜிங்கை பயன்படுத்தி அதிக டீடெயில் கொடுக்கும் சிஸ்டமாக இது இருக்கும். ஆகவே, ரியல் லைப் இமேஜிங் அனுபவத்தை இந்த கேமரா சிஸ்டம் கொடுக்க இருக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.

மொத்தமா இறங்குது.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. மட்டுமில்ல!

ஒன்பிளஸ் கிளப் மூலமாக வெளியான தகவலின்படி இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி + 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களும் வர இருக்கிறது.

7000mAh பேட்டரி பேட்டரி மட்டுமல்லாமல், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 215 கிராம் எடை வருகிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 165hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஆகவே, கேமிங்குக்கு ஏற்ற மாடலாகவும் இருக்கும். அதேபோல பிரத்யேக கேமிங் என்ஜின் கொண்ட மாடலாகும்.

இந்த ஒன்பிளஸ் 14 ஸ்மார்ட்போனில் ஸ்குவார் மேட்ரிக்ஸ் டிசைன் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த டிசைனுடன் பிளாக், பர்பிள், டைட்டானியம் போன்ற கலர்களில் வெளியாக இருக்கிறது. கூடுதல் கலர்களும் இடம்பெற வாய்ப்புள்ளது.

32 எம்பி செல்பீ கேமரா எதிர்பார்க்கலாம். பிரீமியம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் பிளஸ் கீ (Plus Key) இதிலும் கிடைக்க இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் கிடைக்க இருக்கிறது. இதில் டீடெயில்மேக்ஸ் என்ஜின் தவிர மற்ற பீச்சர்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மற்றும் ஒன்பிளஸ் கிளப் வழிவாக கசிந்த பீச்சர்களாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 To Pack DetailMax Engine For Clarity Realism Imaging Co-founder Pete Lau Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X