மார்க்கெட்டே திணறப்போகுது.. 7000mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16.. வருகிறது புதிய OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனை 2025 அக்டோபர் மாதம் இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகமான சில மாதங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் 15 போனின் சிப்செட் கேமரா, பேட்டரி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 15 அம்சங்கள் (OnePlus 15 specifications): ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன். அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 (Snapdragon 8 Elite Gen 2) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன வீடியோ எடிட்டிங் ஆப்பகளை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
சக்திவாய்ந்த அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த ஒன்பிளஸ் 15 போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன் புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும்.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
மேலும் 7000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








