முடிஞ்சு போச்சு.. மார்க்கெட் காலி.. புது OnePlus போன்.. 7300mAh பேட்டரி, 120W வயர்டு, 50W வயர்லெஸ் சார்ஜிங்!
கடந்த வார இறுதியில் - ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் சீனா மற்றும் இந்திய அறிமுக தேதி (உலகளாவிய அறிமுக தேதி) உடன் சேர்த்து ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் ஆன்லைனில் லீக் ஆகி இருந்தது. இருப்பினும் அந்த விவரங்கள் அவ்வளவாக அறியப்படாத ஒரு சோர்ஸ்-ல் (Source) இருந்து வந்ததால், அதை "சீரியஸ்" ஆக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஆனால் இப்போது, நம்பகமான சோர்ஸ் ஆன பால்ட் பாண்டா (Bald Panda) வழியாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவு மற்றும் சார்ஜிங் ஸ்பீட் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 15 ஆனது மிகப்பெரிய 7300mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேட்டரி ஆகும்.

மேலும் இந்த பேட்டரி 120W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடனும் வரும் என்றும் டிப்ஸ்டர் பால்ட் பாண்டா வெளிப்படுத்தியுள்ளார். டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் காணப்படும் 6.82-இன்ச் டிஸ்பிளேவை விட சற்று சிறியதாகும்.
அளவீடுகளை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது 8.1 மிமீ தடிமன் மற்றும் கலர் வேரியண்ட்டை பொறியது 211 முதல் 215 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்று டிப்ஸ்டர் பால்ட் பாண்டா கூறியுள்ளார். இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியம் (சாண்ட் ட்யூன்), பிளாக் மற்றும் பர்பிள் போன்ற கலர் ஆப்ஷன்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் 1/1.5-இன்ச் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இருக்கும், இது சோனி LYT-700 சென்சாராக இருக்கலாம். இதோடு சாம்சங் JN5 சென்சார் உடனான 50-மெகாபிக்சல் 1/2.76-இன்ச் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் இடம்பெறலாம். அல்ட்ரா-வைட் ஷாட்களுக்கு, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் மற்றொரு 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 சென்சார் பேக் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் 15 சீனா, உலகளாவிய (இந்தியா) அறிமுக தேதி குறித்த லீக்: தொழில்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, 91மொபைல்ஸ் ஹிந்தி வலைத்தளம் ஆனது, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதே நாளில் இந்தியாவில் அறிமுகம் நடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்பாக நடக்கும் சீன அறிமுகத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சரியான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. சில லீக் தகவல்கள் இது வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கின்றன.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 எலைட் (Snapdragon 8 Gen 5 Elite) சிப்செட் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வரையிலாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் அறிமுகம் வழக்கமான லான்ச் டைம்லைனின் கீழ் தான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது சீன அறிமுகம் 2025 டிசம்பரிலும், உலகளாவிய அறிமுகம் 2026 ஜனவரியிலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஐக்யூ, ரியல்மி போன்ற நிறுவனங்கள் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 எலைட் சிப்செட் உடனான தங்கள் ஸ்மார்ட்போன்களை விரைவாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதால், ஒன்பிளஸ் 15 ஆனது இம்முறை முன்கூட்டியே அறிமுகம் செய்யப்பட உள்ளது. விலையை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.65,000 - ரூ.75,000 என்கிற விலை வரம்பில்அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








