Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர் விழுது.. ரூ.4,000 ஆபரில் OnePlus 5ஜி போன்.. 7300mAh பேட்டரி, 120W சார்ஜிங், 50MP கேமரா!

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனுக்கு முன்னதாக மிரளவிடும் பீச்சர்களுடன் வெளியான ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. அமேசான் தளத்தில் தள்ளுபடி போக கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 7300mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.72,999ஆக இருக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.3,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.69,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ரூ.49,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

ஆர்டருக்கு மேல ஆர்டர் விழுது.. ரூ.4,000 ஆபரில் OnePlus 5ஜி போன்!

ஒன்பிளஸ் 15 அம்சங்கள் (OnePlus 15 Specifications): தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.

4 மேஜர் ஓஎஸ் அப்டேட் கொண்டுள்ளது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கிடைத்துள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Vicus 2) பாதுகாப்பை கொண்ட 6.78 இன்ச (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

1.5K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் வருகிறது. மேலும், ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்டுள்ளது. அல்ட்ரா வைடு கேமராவுக்கு ஓம்னிவிஷன் ஓவி50டி (Omnivision OV50D) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டே கேமராவும் இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. சாம்சங் ஜேஎன்5 சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்டுள்ளது. டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங், 8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 3.5எக்ஸ் இன்-சென்சார் ஜூமிங் வருகிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

இதில் ஐஎம்எக்ஸ் 709 (IMX709) சென்சார் கிடைக்கிறது. 7300mAh பேட்டரியை கொடுக்கும் இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனுக்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்துள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க ஐபி66 ரேட்டிங், ஐபி68 ரேட்டிங், ஐபி69 ரேட்டிங் மற்றும் ஐபி69K ரேட்டிங் கொண்டுள்ளது.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்இடி (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 7 (Wi-Fi 7) கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0), பெய்ட பெய்டோ பி1ஐ, பி1சி, பி2ஏ, ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) கிடைக்கிறது. சாண்ட் ஸ்டோர்ம் (Sand Storm), இன்பினிட்டி பிளாக் (Infinite Black) மற்றும் அல்ட்ரா வயலெட் (Ultra Violet) ஆகிய கலர்களில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 Snapdragon 8 Elite Gen 5 7300mAh Battery Gets Discount in India Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X