Home
Mobile

சீனாக்காரன் மூளையே தனி.. தொட்டால் சில்லுனு இருக்கும் Ice Skin உடன் OnePlus-ன் புது போன்!

ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் அறிமுகம் எதிர்பார்ப்பதை விட விரைவாக நடக்க உள்ளது என்கிற தகவல் இந்நேரம் உங்கள் காதுகளுக்கு எட்டியிருக்கலாம். ஒன்பிளஸ் 13 க்கு அடுத்தபடியாக வரும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது, சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஒரு குவால்காம் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது

ஆக இது "எதிர்பார்க்கப்பட்ட" ஜனவரி 2026 க்கு பதிலாக 2025 நவம்பர் அல்லது டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் சாண்ட் ட்யூன் (Sand Dune) கலர் ஆப்ஷன் டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த டீசர் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் க்ளோஸ்அப் லுக்கை வழங்கி, சில கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது.

தொட்டால் சில்லுனு இருக்கும் Ice Skin உடன் OnePlus-ன் புது போன்!

ஒன்பிளஸ் பிராண்டின் கூற்றுப்படி இந்த கலர் ஆப்ஷன் "மணல் குன்றுகளின் அழகியல்" மூலம் ஈர்க்கப்பட்டுள்ளது. இதோடு ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஒரு விண்வெளி-தர உலோக மிட்-ஃபிரேமை கொண்டு இருக்கும் என்பதும், இது டைட்டானியத்தை விட இலகுவானதாக இருக்கும் என்கிற தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது ஏரோஸ்பேஸ்-கிரேட் நானோ-பீசெராமிக் மெட்டல் மிட்-ஃபிரேம் ஆகும். இது டைட்டானியத்தை விட 26.3 சதவீதம் இலகுவானது என்றும், 134 சதவீதம் சிறந்த தேய்மான எதிர்ப்பு மற்றும் 26.6 சதவீதம் மேம்பட்ட வெப்பச் சிதறலை வழங்குகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது குவென்ச்சிங் டெக்ஸ்ச்சர் என்ற புதிய வடிவமைப்பு அமைப்புடன் அறிமுகமாகும் என்பதும், இது "ஐஸ் ஸ்கின்" உணர்வை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது, அதாவது இது தொடுவதற்கு குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்குமாம்(?)

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் கேமரா டிசைன் ஆனது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட "மினி ஸ்மார்ட்போன் ஆன" ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் உள்ள கேமரா யூனிட்டை போலவே இருக்கிறது. ரவுண்ட் ஐலேண்ட்டிற்கு பதிலாக சதுர வடிவமைப்பை கொண்டுள்ளது; இந்த டிசைன் ஸ்மார்ட்போனின் பேக் பேனலுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதோடு ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ஆப்பிள் ஐபோன்களுக்கு இணையான ஆர்-ஆங்கிள் மூலைகளை கொண்டுள்ளது. ஆக இதை ஒரு கையால் நீண்ட நேரம் பயன்படுத்தும்போது மிகவும் வசதியான பிடிமானம் கிடைக்கலாம். ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, வரவிருக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 1.15 மிமீ அளவிலான மிகவும் குறுகிய பெசல்கள் மட்டுமே உள்ளன, இது மிகவும் ஆழமான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கலாம்

குறிப்பிடத்தக்க வகையில் - ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் மூலம் இயக்கப்படும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படுவதற்குமான காரணமும் கூட!

ரியல்மி மற்றும் ஐக்யூ ஆகிய இரண்டுமே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடனான அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த வேகத்தில் - அதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் வரும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனும் விரைவில் அறிமுகம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்கிற அறிவிப்பு வெளியான வேகத்தில், ஐக்யூ நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 உடன் வரும் அதன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்திருந்தது. இந்த பந்தயத்தில் ஒன்பிளஸ் 15 மாடலும் இணைந்துள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 15 Sand Dune Colour Ice Skin feel Quenching Texture and More Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X