Home
Mobile

அள்ளிக்கோ.. ரூ.4000 டிஸ்கவுண்ட், இலவச பட்ஸ், Jio, Paytm-ல் ரூ.2000.. ஆபர் விலையில் OnePlus 15 விற்பனை!

எப்போதும் இல்லாதபடியாக ஒன்பிளஸ் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த 1 மணி நேரத்திலேயே அதை விற்பனை செய்ய தொடங்கி உள்ளது. அது ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனாகும். 7 மணிக்கு இந்திய தொடங்கிய வெளியீட்டு நிகழ்வு தொடங்கியது. 7.30 மணிக்கு மேல் விலை அறிவிக்கப்பட்டது. 8 மணி முதல் விற்பனைக்கு வந்து விட்டது.

ஒன்பிளஸ் 15 அசல் விலை VS ஆபர் விலை: இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அள்ளிக்கோ.. ஆபர் விலையில் OnePlus 15 விற்பனை!

அறிமுக சலுகையாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை வாங்க எச்டிஎப்சி (HDFC) வங்கியின் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்துவதன் மூலம் (பேமண்ட் முறையை) பொறுத்து ரூ.4000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் 12GB ரேம் ஆப்ஷனை ரூ.68,999 க்கும், 16GB ரேம் ஆப்ஷனை ரூ.75,999 க்கும் வாங்க முடியும்.

டிரேட்-இன் கிரெடிட்டை (எக்ஸ்சேன்ஜ்) பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பிளஸ் டிவைஸ் ரூ.4,000 வரையிலும், பிற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2,000 வரையிலும் தள்ளுபடி கிடைக்கும். ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் - 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களை தேர்வுசெய்யலாம். ஆஃப்லைன் வழியாக வாங்குபவர்கள் மாதத்திற்கு ரூ.4,056 முதல் தொடங்கும் இஎம்ஐ பைனான்ஸ் திட்டங்களை அணுகலாம்.

ஒன்பிளஸ் 15-ஐ வாங்குபவர்களுக்கான கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ஆரம்பத்திலேயே வாங்குபவர்களுக்கு ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 (OnePlus Nord Buds 3) இலவசமாக கிடைக்கும். கூடவே 180 நாள் போன் ரீபிளேஸ்மென்ட் பிளான் மற்றும் வாழ்நாள் டிஸ்பிளே வாரண்டியும் கிடைக்கும். இதோடு புதிய ஜியோ போஸ்ட்பெய்டு பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் ரூ.2,250 வரை சேமிப்பை பெறலாம். கடைசியாக ரூ.2,000 வரை மதிப்புள்ள பேடிஎம் பிளைட் வவுச்சர்களும் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் ஸ்டோர் (OnePlus Store) ஆப், அமேசான் (Amazon) மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் (OnePlus Experience Stores), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital), க்ரோமா (Croma), விஜய் சேல்ஸ் (Vijay Sales) மற்றும் பஜாஜ் எலெக்ட்ரானிக்ஸ் (Bajaj Electronics) உள்ளிட்ட முக்கிய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்தளங்களின் வழியாக வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 15 விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே (1272 x 2772 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 330 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் கலர்களுக்கான ஆதரவு உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 2 பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் 6 எபிஷியன்ஸி கோர்களை கொண்டுள்ளது. மேலும் 4.608ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக் ஸ்பீடையும் வழங்குகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் அல்ட்ரா பிளஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 24மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா உள்ளன. இதன் ரியர் கேமரா யூனிட்டால் 30 எப்பிஎஸ்-இல் 8கே வீடியோக்களை படமாக்க முடியும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மாட்போன் ஆனது 7300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது சுமார் 39 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், ஹால் சென்சார், லேசர் ஃபோகஸ் சென்சார், ஸ்பெக்ட்ரம் சென்சார், ஐஆர் பிளாஸ்டர் உட்பட பல ஆன்போர்ட் சென்சார்களை கொண்டுள்ளது. இது இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 கொண்டு இயங்குகிறது. மேலும் இது IP66+IP68+IP69+IP69K ரேட்டிங்களை பெற்றுள்ளது. கடைசியாக அளவீடுகளை பொறுத்தவரை இன்ஃபினைட் பிளாக் மற்றும் அல்ட்ரா வயலட் ஆகிய இரண்டும் 161.4x76.7x82 மிமீ மற்றும் எடையில்சுமார் 215 கிராம் உள்ளன. இருப்பினும், சாண்ட் ஸ்டார்ம் கலர் ஆப்ஷன் சற்று மெல்லியதாகவும், இலகுவாகவும் உள்ளது. இது 81 மிமீ தடிமன் மற்றும் சுமார் 211 கிராம் எடையை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 Sale Offers in Detail Free Buds Rs 4000 Bank Discount Trade in Credit Jio and Paytm Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X