OnePlus 15 Price இவ்ளோ தானா.. OnePlus 13-ஐ விட கம்மியா இருக்கே.. அப்போ இந்த முறை SALE பிச்சிக்கும்!
குவால்காமின் லேட்டஸ்ட் மற்றும் பிளாக்ஷிப் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 உடனான ரியல்மி ஜிடி 8 ப்ரோ மற்றும் ஐக்யூ 15 ஆகிய 2 மாடல்களுமே அறிமுகமாகி விட்டது. இனி பாக்கி இருப்பது - ஒன்பிளஸ் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மட்டும் தான்.
அதிநவீன அம்சங்கள் மற்றும் லேட்டஸ்ட் ஆக்சிஜென் ஓஎஸ் 16 ஆகியவற்றை கொண்டு வரும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற அக்.27 சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது (அதை தொடர்ந்து இந்தியாவில் நவம்பர் 13 அன்று அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது)/ இதற்கிடையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாகவே, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது அதன் முன்னோடியை விட (அதாவது ஒன்பிளஸ் 13 மாடலை விட) சற்று மலிவான விலையை கொண்டிருக்கும் என்று பல அறிக்கைகள் கூறின. இப்போது, பிரபல டிப்ஸ்டர் அர்சீன் லூபின் வழியாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் இங்கிலாந்து சந்தைக்கான விலை விவரங்கள் லீக் செய்யப்பட்டுள்ளது
அதன்படி 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் உடனான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது யுகே-வில் 949 பவுண்டுகள் ஸ்டெர்லிங்கிற்கு அறிமுகப்படுத்தப்படும். ஒப்பிடுகையில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அதே ஸ்டோரேஜ் ஆப்ஷன் 999 பவுண்டுகள் ஸ்டெர்லிங்கிற்கு வாங்க கிடைக்கிறது. இது தோராயமாக 67 அமெரிக்க டாலர் வித்தியாசத்தை கொண்டுவருகிறது.
துரதிர்ஷ்டவசமாக, ஆஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 256ஜிபி ஆப்ஷனின் விலை விவரங்களை டிப்ஸ்டர் வெளியிடவில்லை. ஆனால் இந்த மிதமான விலைக் குறைப்பு சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளிலும் பிரதிபலிக்கும் என்பதிலும், இதன் விளைவாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விற்பனை சூடுபிடிக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.
உண்மையிலேயே ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை மலிவான விலைக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்திருந்தால் - அது ஐக்யூ 13 ஸ்மார்ட்போனிற்கு கிடைத்த வரவேற்பே முக்கிய காரணமாக இருக்கும். அக்.20 அறிமுகமான ஐக்யூ 15 மாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவில் அறிமுகமான வேகத்தில், வெறும் 4 மணி நேரத்தில் 1 லட்சத்து 42 ஆயிரம் யூனிட்கள் விற்பனையை சந்தித்துள்ளது.
இது முந்தைய ஜெனரேஷன் ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும்போது 87 சதவீதம் அதிகரிப்பு ஆகும். அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, எந்த முன்கூட்டிய ஆர்டர் காலமும் இல்லாமல் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது தான் இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என்பதையும் ஐக்யூ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதே மாதிரியான விற்பனை உத்தி (Sale Strategy) இந்திய அறிமுகத்தின் போதும் நடக்குமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது இன்னும் அடுத்த சில நாட்களில் அல்லது சில வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகமாகி விடும். ஏனென்றால் முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் 15 ஆனது நவம்பர் 13 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனமானது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி வருகிறது. அப்படியாக ஒன்பிளஸ் 15-ன் டிசைன், சிப்செட் மற்றும் கலர் ஆப்ஷன்களை தொடர்ந்து, பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 100W வயர்டு சூப்பர் பிளாஷ் சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரி இருக்கும். இது அதன் முன்னோடியை (ஒன்பிளஸ் 13 மாடலை) விட குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் ஆகும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி உள்ளது.


Click it and Unblock the Notifications








