இதுதான் புதிய ஒன்பிளஸ் 5ஜி போன்.. 100W சார்ஜிங்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல் சொல்லுங்க பார்ப்போம்?
ஒன்பிளஸ் நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் தனது புதிய ஒன்பிளஸ் 15 (OnePlus 15) போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த ஒன்பிளஸ் போனின் படங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. அதுவும் ஆப்சொலுயுட் பிளாக் (Absolute Black), மிஸ்ட் பர்பிள் (Mist Purple), ட்யூன் (Dune) நிறங்களில் இந்த போன் வெளிவரும்.
அதேபோல் எல்இடி பிளாஸ் உடன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன். பின்பு பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் போன். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான இந்த ஒன்பிளஸ் 15 போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 15 அம்சங்கள் (OnePlus 15 specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன வீடியோ எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த ஒன்பிளஸ் 15 போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன். அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6.75-இன்ச் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன் புதிய
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும்.
50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பிடெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
7000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும். அதேபோல் இந்த போன் ரூ.79,999 விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo credit: Weibo, themobileindian


Click it and Unblock the Notifications








