ஒரே நேரத்தில் 2 புதிய OnePlus போன்கள்.. ஒன்னு 7800mAh.. இன்னொன்னு 7000mAh பேட்டரி.. எந்த மாடல்கள்?
ஒன்பிளஸ் நிறுவனம் வழக்கமாக பின்பற்றும் ஒரு விஷயத்தை பின்பற்றாமல் ஒரே நேரத்தில் 2 வகையான பட்ஜெட் பிரிவின் கீழ், புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதென்ன மாடல்கள்? வழக்கமாக என்ன செய்யும்? இம்முறை வழக்கத்திற்கு மாறாக என்ன செய்யவுள்ளது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒவ்வொரு ஆண்டும், முதலில் அதன் நம்பர் சீரீஸ் பிளாக்ஷிப் / பிரீமியம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும். அதன் பின்னர் மிட்-ரேன்ஜ் பிரிவின் கீழ் அதன் புதிய ஒன்பிளஸ் ஏஸ் சீரீஸ் (இந்தியாவில் நோர்ட் சீரிஸ்) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும்.

உதாரணத்திற்கு சீனாவில் கடந்த அக்டோபரில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) அறிமுகமானது; பின்னர் ஒன்பிளஸ் ஏஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் டிசம்பரில் அறிமுகமானது. ஆனால் ஒரு லேட்டஸ்ட் லீக் தகவல் ஆனது ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு வேறுபட்ட உத்தியை கடைப்பிடிக்கக்கூடும் என்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நெக்ஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15 (OnePlus 15) பணியாற்றி வருவதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. (அறியாதோர்களுக்கு 4 என்கிற ண் மீது இருக்கும் அச்சம் காரணமாக ஒன்பிளஸ் 14 அறிமுகம் செய்யப்பட்டது). இது வரவிருக்கும் ஸ்னாப்டிரகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப்செட் உடன் 2025 அக்டோபரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுகையில் ஒன்பிளஸ் எஸ் 6 சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் ஏஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ என மொத்தம் 2 மாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நவம்பர் அல்லது டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நம்பகமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனில் இருந்து வந்த ஒரு புதிய லீக்ஸ் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் உத்தியை மாற்ற உள்ளதாக கூறுகிறது.
கிடைக்கப்பெற்ற தகவலின் படி ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஆகிய இரண்டும் 2025 அக்டோபரில் ஒன்றாக அறிமுகப்படுத்தப்படும். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சற்று தாமதமாக வரக்கூடும் அல்லது வராமலேயே கூட போகலாம்.
ஏனென்றால் ஒன்பிளஸ் 13 (OnePlus 13), ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ப்ரோ (OnePlus Ace 5 Pro) ஆகிய 3 ஸ்மார்ட்போன்களுமே ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆக ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) உடன் அதேபோன்ற 3 அப்கிரேடட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக, ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மாடலை முற்றிலுமாக தவிர்க்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இப்போதைக்கு இது வெறும் ஒரு ஊகம் தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- நான்கு பக்கங்களிலும் மிகவும் மெல்லிய பெசல்களை கொண்ட டிசைன்
- 6.78 இன்ச் பிளாட் OLED LTPO 2கே டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்
- 100W வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh க்கும் மேற்பட்ட பேட்டரி
- பிளஸ் கீ (பக்கவாட்டு பட்டன்)
- மெட்டல் மிடில் ஃபிரேம்
- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- IP68 / IP 69 ரேட்டிங்
ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5கே ரெசல்யூஷன்
- 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.83 இன்ச் பிளாட் OLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் சிப்செட்
- அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- மெட்டல் மிடில் ஃபிரேம்
- 7,800mAh அளவிலான பெரிய பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்


Click it and Unblock the Notifications








