Home
Mobile

இதை யாரும் எதிர்பார்க்கல.. OnePlus 15-க்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.. நினைத்ததைவிட கம்மி பட்ஜெட்.. என்ன விலை?

ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) மாடல்கள் வெளியாக இருக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே விலை விவரங்கள் கசிந்து ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது. நினைத்ததைவிட கம்மியான விலைக்கு கிடைக்க இருப்பதால், ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற மிட்-ரேஞ்ச் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் பிரியர்களிடையேயும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் பீச்சர்கள் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் இன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு) ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதனால், கடந்த வாரமே முக்கிய பீச்சர்கள் உறுதியாகிவிட்டன. மற்ற பீச்சர்களும் கசிந்துவிட்டன. ஆனால், விலை விவரங்கள் கசியாமல் இருந்தது. ஆனால், இப்போது, வெளியீட்டுக்கு சில மணி நேரங்களே இருக்கும் நேரத்தில் விலைகள் கசிந்துள்ளன.

இதை யாரும் எதிர்பார்க்கல.. OnePlus 15-க்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 4,299 சீன யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52,921) ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 4,899 சீன யுவான் (இந்திய மதிப்பில் ரூ.60,307) ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை 5,399 சீன யுவான் (இந்திய மதிப்பில் ரூ.66,462) ஆக இருக்கிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 3,099 சீன யுவான் (இந்திய மதிப்பில் ரூ.38,149) ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 3,399 சீன யுவான் (இந்திய மதிப்பில் ரூ.41,842) ஆகவும் இருக்கிறது. இதுபோக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்களும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விலைகள் கசியவில்லை.

சீனாவில் வெய்போ (Weibo) மூலம் இந்த விலைகள் கசிந்துள்ளன. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ரூ.70,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ரூ.45,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது, அதைவிட மலிவாக கிடைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இப்போது, பீச்சர்களை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 15 அம்சங்கள் (OnePlus 15 Specifications): 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வர இருக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7300mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் + பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது.

இந்த கேமராவுக்கு 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்க இருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா வர இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) வர இருக்கிறது. இப்போது, ஏஸ் மாடலில் எதிர்பார்க்கப்படும் பீச்சர்களை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 6 அம்சங்கள் (OnePlus Ace 6 Specifications): 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 165Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் கலர்ஓஎஸ் 16 ஆகிய லேட்டஸ்ட் யுஐ கிடைக்க இருக்கிறது.

120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7800mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் & IP69K ரேட்டிங் வர இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. குயிக் சில்வர், ஃபிளாஷ் ஒயிட் மற்றும் ரேசிங் பிளாக் கலர்களில் கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 OnePlus Ace 6 Price Leaked With Top End Configuration Ahead of Launch in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X