இந்தியா லான்ச் டேட் இதுதான்.. நினைச்சதை விட சீக்கிரமா.. 7300mAh உடன் OnePlus 15.. 7800mAh உடன் OnePlus 15R!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் 2025 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஸ்மார்ட்போனின் சீன அறிமுக தேதியை உறுதி செய்த வேகத்தில்.. அதே ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுக தேதி ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.
அறியாதோர்களுக்கு சீனாவில் ஓன்பிளஸ் ஏஸ் 6 சீரிஸின் கீழ் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஏஸ் 6 மாடல் ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் என்கிற பெயரில் அறிமுகமாகும். இது ஒன்பிளஸ் 15 உடன் சேர்த்து வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியா லன்ச் டேட் (India Launch Date): இதற்கிடையில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு, 2025 நவம்பர் 13 ஆம் தேதி அன்று இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே (ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15ஆர்) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
என்னென்ன கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும், என்ன விலைக்கு வரும்? ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது சாண்ட் ஸ்டார்ம், அப்சலூட் பிளாக் மற்றும் மிஸ்டி பர்பிள் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்லது ஒன்பிளஸ் 15ஆர் மாடல் ஆனது குவிக்சில்வர், பிளாஷ்ஒயிட் மற்றும் ரேஸிங் பிளாக் ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
விலையை பொறுத்தவரை, இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போண்ணின் விலை ரூ.70,000 முதல் ரூ.75,000 வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்கலாம்.
இது ஒன்பிளஸ் 13 மாடலின் வெளியீட்டு விலையான ரூ.69,999 இலிருந்து ஒரு சிறிய உயர்வை குறிக்கிறது. மேலும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது 16 ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படலாம், அது ரூ. 80,000 அல்லது அதற்கு மேற்பட்ட விலை நிர்ணயத்தை பெறலாம்.
ஒன்பிளஸ் 15ஆர் ஆனது ரூ.45,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது பிஓஇ-யின் மூன்றாம் தலைமுறை ஓரியண்டல் டிஸ்பிளே (BOE's third-generation Oriental Display) உடனான உலகின் முதல் 165 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்க்ரீனை (165Hz OLED screen) கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகமாக உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைவர் லி ஜீ லூயிஸின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது 165 ஹெர்ட்ஸ் அல்ட்ரா-ரெஃப்ரெஷ் ரேட் சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கும். இது 6.78 இன்ச் அளவிலான பிஓஇ எக்ஸ்3 ஓஎல்இடி பேனலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும். மேலும் இந்த டிஸ்பிளே 1.5கே ரெசல்யூஷனையும் வழங்கலாம்.
நம்பகமான டிப்ஸ்டர் ஆன பால்ட் பாண்டா (Bald Panda) வழியாக கிடைத்த லீக் தகவலின்படி ஒன்பிளஸ் 15 ஆனது மிகப்பெரிய 7300mAh பேட்டரியை கொண்டிருக்கும். மேலும் இந்த பேட்டரி 120W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடனும் வரும் என்றும் டிப்ஸ்டர் பால்ட் பாண்டா வெளிப்படுத்தியுள்ளார்.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சீனாவில் 3சி சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் லிஸ்டிங் ஆனது இது 120W பாஸ்ட் சார்ஜருடன் அனுப்பப்படலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆக 120W பாஸ்ட் சார்ஜிங் திறன் இருப்பது "கிட்டத்தட்ட" உறுதி! டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1.5கே ரெசல்யூஷனை ஆதரிக்கும் BOE OLED டிஸ்பிளே இடம்பெறலாம்.
இதன் டிஸ்பிளே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஆதரவுடன் வரலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை பேக் செய்யலாம். பேட்டரி டிப்பார்ட்மென்ட்டை பொறுத்தவரை இது 120W பாஸ்ட் சார்ஜிங்குடன் 7,800mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். கடைசியாக ஒரு மெட்டல் மிடில் ஃபிரேம் டிஸைனுடன் ஐபி68 ரேட்டிங்கை பெறலாம், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ்16 (ColorOS 16) கொண்டு இயங்கலாம்.


Click it and Unblock the Notifications








