இப்படி ஆகும்னு சொப்னத்திலும் கண்டில்லா சாரே.. ரூ.93999 ஆக விலை உயர்ந்த 7300mAh பேட்டரி OnePlus போன்!
ஸ்மார்ட்போன்கள் மீதான விலை உயர்வு முடிவில்லாமல் தொடர்வது போல் தெரிகிறது. உதிரிபாகங்களின் விலை உயர்வு காரணமாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்று, மீண்டும் விலை உயர்த்தப்பட்டு.. அதாவது குறைவான இடைவெளியில் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு.. தற்போது ரூ.90,000 க்கும் மேலான விலைப்பிரிவிற்குள் நுழைந்துள்ளது.
அது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை மேலும் ரூ.8,000 வரை உயர்ந்துள்ளது. இந்த புதிய விலை ஏற்கனவே ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) இணையதளத்தில் அமலுக்கு வந்துவிட்டது. இந்த விலை மாற்றம் குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஒன்பிளஸ் 15 அசல் அறிமுக விலை, முதல் விலை உயர்வுக்கு பிறகான விலை மற்றும் இரண்டாவது விலை உயர்வுக்கு பிறகான தற்போதைய விலை: அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கு வாங்க கிடைத்தது.
பின்னர் ஒன்பிளஸ் 15 மீது முதல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. அது ரூ.5000 விலை உயர்வாகும். இதை தொடர்ந்து ஒன்பிளஸ் 15 ஸ்மாட்போனின் பேஸிக் வேரியண்ட்டின் விலை ரூ.72,999 இல் இருந்து ரூ.77,999 ஆக அதிகரித்தது. தற்போது இரண்டாவது முறையாக மேலும் ரூ.8000 விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சமீபத்திய விலை உயர்வை தொடர்ந்து ரூ.77,999 க்கு வாங்க கிடைத்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் ஆப்ஷன் இப்போது ரூ.85,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை தான் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனுக்கும்!
16ஜிபி ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகமாகி முதல் விலை உயர்வின் போது ரூ.85,999 ஆக மாறி, இப்போது ரூ.93,999 க்கு வந்து நிற்கிறது. இந்த மிகப்பெரிய விலை உயர்வை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.3,000 உடனடி தள்ளுபடியை அறிவித்துள்ளது என்றாலும், இந்த தள்ளுபடி எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே (1272 x 2772 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 330 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் கலர்களுக்கான ஆதரவு உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 2 பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் 6 எபிஷியன்ஸி கோர்களை கொண்டுள்ளது. மேலும் 4.608ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக் ஸ்பீடையும் வழங்குகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் அல்ட்ரா பிளஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 24மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா உள்ளன. இதன் ரியர் கேமரா யூனிட்டால் 30 எப்பிஎஸ்-இல் 8கே வீடியோக்களை படமாக்க முடியும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மாட்போன் ஆனது 7300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது சுமார் 39 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications