Home
Mobile

அடிச்சான் பாரு OnePlus.. 7000mAh பேட்டரி, 120W சார்ஜிங், மூன்று 50MP கேமராவுடன் புது போன்!

ரிலீஸ் ஆன ஐபோன் 17 ஆச்சும், ரிலீஸ் ஆகப்போற ஷாவ்மீ 17 ஆச்சும்.. "நான் இறக்குறேன் பாரு" என்று கூறும் படியாக ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. அது ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடல் ஆகும்.

ஏற்கனவே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளில் மூழ்கி திளைக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் மீதான ஹைப்-ஐ இன்னும் எகிறவைக்கும் படியாக, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முழு பின்பக்கத்தையும் வெளிப்படுத்தும்.. ஒன்பிளஸ் 15 மாடலுக்கான புதிய டிசைனை வெளிப்படுத்தும் ஒரு புகைப்படம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

OnePlusபுது போன்.. 7000mAh பேட்டரி, 120W சார்ஜிங், மூன்று 50MP கேமரா!

இந்த புகைப்படம் சீன சமூக ஊடக தளமான வெய்போ (Weibo) வழியாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக லீக் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட டிப்ஸ்டர் இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் 15 என்கிறார். லீக் ஆன புகைப்படத்தில் உள்ள ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஒரு சதுர வடிவிலான கேமரா யூனிட்டை கொண்டுள்ளது.

அதற்குள் ஒரு டேப்லெட் வடிவ கட்-அவுட் மற்றும் இரண்டு வட்ட வடிவ கட்-அவுட்கள் உள்ளன. டேப்லெட் கட்-அவுட்டில் ப்ரைமரி கேமராவும், ஒரு செக்கண்டரி லென்ஸும் இருப்பது போல் தெரிகிறது. மறுபுறம் உள்ள இரண்டு வட்ட வடிவ கட்-அவுட்களிலும் ஒரு ஃபிளாஷ் மற்றும் மற்றொரு லென்ஸ் உள்ளன.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் மூன்று கேமராக்களும் 50 மெகாபிக்சல் சென்சார்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 15 மாடலுக்கானா இந்த டிசைன், ஒன்பிளஸ் 13 மாடலில் இருந்து முற்றுலுமாக வெளியேறி ஒன்பிளஸ் 13எஸ் உடன் இணைவதை வெளிப்படுகிறது.

முக்கியமான ஒன்பிளஸ் 15 மாடலில் ஹசல்பிளாட் (Hasselblad) பிராண்டட் கேமராக்கள் இடம்பெறாது. நினைவூட்டும் வண்ணம், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் ஆனது ஹசல்பிளாட் உடனான கூட்டாண்மையை முடித்து கொண்டது. ஆக ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் அதன் இன்-ஹவுஸ் கேமரா எஞ்சினான டீட்டெயில்மேக்ஸ்-ஐ (DetailMax) பயன்படுத்தலாம்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளே
- குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்

- 120W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் ஒரு பெரிய 7,000mAh பேட்டரி
-ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) ஆப்ரேட்டிங் சிஸ்டம்
- பிளாக், பர்பிள் மற்றும் டைட்டானியம் ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்

ஒன்பிளஸ் 15 எப்போது இந்தியாவில் அறிமுகமாகும், என்ன விலைக்கு வரும்? இது அடுத்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகமாகும் (China Launch) என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியா (India Launch) உட்பட உலகளாவிய சந்தைககளில் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்திய சந்தையில் இதன் விலை நிர்ணயம் ரூ.80,000 க்குள் இருக்கும். இன்னும் குறிப்பிட்டு சொன்னால் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13 மாடல் ரூ.69,999 க்கு அறிமுகமானது. சீனாவில் 4 என்கிற எண் நேர்மறையாக பார்க்கப்படுவதால், ஒன்பிளஸ் 14 க்கு பதிலாக நேரடியாக ஒன்பிளஸ் 15 அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus 15 Leaked Photo Shows New Triple Rear Camera Design
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X