Home
Mobile

OnePlus 15 Price இதுதான்.. இன்று இரவு 8 மணி முதல் SALE.. மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த போன் இன்று அறிமுகம்!

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் இன்று (நவம்பர் 13 ஆம் தேதி) மாலை நடக்கிறது. சுவாரசியமாக அறிமுகமான உடனேயே ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விற்பனையும் இன்று இரவு 8 மணி முதலே தொடங்க உள்ளது.

ஆம்! ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விற்பனை ஆனது அது அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடங்கும். இது இன்று (நவ.13) இரவு 8 மணி முதல், பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ஒன்பிளஸ் இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோர் (OnePlus India online store) வழியாக வாங்க கிடைக்கும்.

OnePlus 15 Price இதுதான்.. இன்று இரவு 8 மணி முதல் SALE!

என்ன விலை? ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டதால் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. கூடவே ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் துல்லியமான விலையும் லீக் ஆகியுள்ளது. பீபம் (Beebom) வலைத்தளம் வழியாக வெளியான விவரங்களின்படி ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.72,999 க்கு வாங்க கிடைக்கும்.

இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ. 79,999 க்கு அறிமுகம் செய்யப்படும். லீக் ஆன விவரங்களின்படி ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பர்பிள் கலர் ஆப்ஷன் அல்ட்ரா வயலெட் (Ultra Violet) என்று அழைக்கப்படும் ,மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன் இன்பினைட் பிளாக் (Infinite Black) என்று அழைக்கப்படும். இவைகள் அனைத்துமே லீக்டு விவரங்களாகும், அதிகாரபூர்வ விலைகள் இன்று மாலை நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்

லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு நிகழ்வு, இன்று (நவ.13) மாலை 7:00 மணிக்கு தொடங்கும். ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் வலைத்தளம் (OnePlus Website) அல்லது அதன் யூட்யூப் சேனல் (OnePlus YouTube Channel) மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் (நேரடி ஒளிபரப்பை) பார்க்கலாம்.

(சீனாவில் அறிமுகமான) ஒன்பிளஸ் 15 அம்சங்கள்: இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளேவை (third-generation BOE Flexible AMOLED display) கொண்டுள்ளது.

இதன் டிஸ்பிளே 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K (1272 x 2772 பிக்சல்கள்) ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 330ஹெர்ட்ஸ் வரை டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 ppi பிக்சல் டென்சிட்டி ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளே 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் கலர்களையும் ஆதரிக்கிறது.

சிப்செட்டை பொறுத்தவரை அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 2 பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் 6 எபிஷியன்ஸி கோர்களை கொண்டுள்ளது, இது 4.608GHz பீக் கிளாக் ஸ்பீடை வழங்குகிறது. இது 16GB வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1TB வரையிலான UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது. அதில் 24மிமீ போக்கல் லென்த் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி ஷூட்டர் உள்ளது. இது 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்ஃபி கேமரா உள்ளது. ரியர் கேமரா செட்டப்பானது 30 fps இல் 8K வீடியோக்களை படமாக்கும் திறனை கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 7300mAh பேட்டரியை பேக்ஸ் செய்கிறது. இது 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. அளவீடுகளில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனானது 161.42x76.67x8.10 மிமீ மற்றும் எடையில் சுமார் 211 கிராம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 Launching Today in India Sale Starts Today 8PM Itself Price Specifications Live Streaming
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X