Home
Mobile

OnePlus 15 இன்று அறிமுகம்.. அம்புட்டு போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைக்கும் விலை, அம்சங்கள்!

ஒருவழியாக ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் அறிமுகம் இன்று (அக்டோபர் 27 ஆம் தேதி) நடக்கிறது. இன்று மாலை நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் - ஒன்பிளஸ் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக.. ஒன்பிளஸ் 13 மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக.. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சீனாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சீன அறிமுகத்தை போலவே இந்திய அறிமுகமாகும் விரைவாக நடக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் வழக்கமான லான்ச் டைம்லைன்-ஐ பின்பற்றி இருந்தால், ஒன்பிளஸ் 15 ஆனது டிசம்பர் 2025 இல் தான் அறிமுகமாகி இருக்க வேண்டும். ஆக இந்தியாவில் இது அடுத்த மாதம் அறிமுகமாகும். நவம்பர் 12 அறிமுகமாகலாம் என்று ஒரு லீக் கூறுகிறது.

OnePlus 15 இன்று அறிமுகம்!

ஒன்பிளஸ் 15 சீன அறிமுக நிகழ்வு எப்போது தொடங்கும்? எங்கிருந்து அப்டேட்களை பெறலாம்? சீனாவில் ஒன்பிளஸ் 15-ன் வெளியீட்டு நிகழ்வானது அக்டோபர் 27 ஆம் தேதி, பெய்ஜிங்கில் உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்கும்). ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா சேனல்கள் வழியாக இந்நிகழ்வின் ஆன்லைன் வெர்ஷனை நடத்த வாய்ப்புள்ளது. அதன் வழியாக நீங்கள் அனைத்து அப்டேட்களையும் பெறலாம்.

ஒன்பிளஸ் 15 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.70,000 முதல் ரூ.75,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ஒன்பிளஸ் 13 மாடலின் விலையை விட குறைவாக இருக்கலாம்.

ஒன்பிளஸ் 15 மாடலில் புதிய கேமரா: ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லி ஜி வழியாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் ஒப்போவின் லுமோ இமேஜிங் சிஸ்டமை அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் கீழ் அறிமுகமான மிகவும் மேம்பட்ட போட்டோகிராஃபி ஃபோகஸ்டு போன் (Most advanced photography-focused phone) ஆக நிலைநிறுத்தப்படும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்

அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் ஹசல்பிளாட் (Hasselblad) உடனான கூட்டாண்மையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. லுமோ இமேஜிங் சிஸ்டமானது ஒப்போ குழுமத்திற்குள் மிக உயர்ந்த அளவிலான இமேஜிங் தொழில்நுட்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் லி கூறியுள்ளார். இதன்மூலம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது "ஒன்பிளஸ் பிராண்டின் வரலாற்றிலேயே" சிறந்த புகைப்பட செயல்திறனை வழங்கும் என்றும், இது டெப்த், லைட் மற்றும் கலர் நம்பகத்தன்மையை மையமாக கொண்டது என்றும் லி கூறியுள்ளார்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 50எம்பி ட்ரிபிள் கேமரா சிஸ்டம் இடம்பெறும். இதில் 85மிமீ கோல்டன் போர்ட்ரெய்ட் குவிய நீளத்திற்கு சமமான 3.5எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸும் அடங்கும். இது ப்ரோ எக்ஸ்டிஆர், புல் போக்கல்-ரேன்ஜ் ஹை-டெபினிஷன் அவுட்புட், 4கே 120எப்பிஎஸ் டால்பி விஷன் ரெக்கார்ட் மற்றும் அல்ட்ரா-கிளியர் லைவ் போட்டோக்களுடன் மேம்பட்ட இமேஜ் ப்ராசஸிங் செட்டப்பை ஆதரிக்கிறது.

பெரிய பேட்டரி: ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 120W வயர்டு சூப்பர் பிளாஷ் சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரி இருக்கும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது அதன் முன்னோடியை விட, அதாவது ஒன்பிளஸ் 13 மாடலை விட குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் ஆகும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13-ல் 6000mAh பேட்டரி உள்ளது.

உலகிலேயே முதல் முறையாக: ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது பிஓஇ-யின் மூன்றாம் தலைமுறை ஓரியண்டல் டிஸ்பிளே (BOE's third-generation Oriental Display) உடனான உலகின் முதல் 165 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்க்ரீனை (165Hz OLED screen) கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகமாக உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 Launch Today in China Event time How to get Live Updates Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X