வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. புது OnePlus போன் ரெடி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய ஒன்பிளஸ் போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக சதுர வடிவிலான கேமரா யூனிட் (Square camera unit) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
மற்ற ஒன்பிளஸ் போன்களை விட தனித்துவமான கேமராக்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 15 அம்சங்கள் (OnePlus 15 specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 (Snapdragon 8 Elite Gen 2) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்போனில் அனைத்து ஆப்களையும் பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.
அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த ஒன்பிளஸ் 15 போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன் புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும்.
50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo credit: innogyan, gsmarena


Click it and Unblock the Notifications








