புதிய சகாப்தம்.. அக்.14 ஆம் தேதி.. உலகிலேயே முதல் முறையாக.. OnePlus 15-ன் அல்ட்ரா ஸ்பெஷல் அம்சம்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும்படியான ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது "உலகிலேயே முதல் முறையாக" என்றும் கூறும்படியான ஒரு ஸ்பெஷல் அம்சத்துடன் வரவுள்ளது.
அப்படி என்ன ஸ்பெஷல் அம்சம்? ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது பிஓஇ-யின் மூன்றாம் தலைமுறை ஓரியண்டல் டிஸ்பிளே (BOE's third-generation Oriental Display) உடனான உலகின் முதல் 165 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்க்ரீனை (165Hz OLED screen) கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகமாக உள்ளது.

இந்த டிஸ்பிளே குறித்த மேலதிக விவரங்கள் ஆனது - வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி அன்று ஷென்செனில் நடைபெறும் பிஓஇ நிறுவனத்தின் பிளெக்சிபிள் ஓஎல்இடி பிளாக்ஷிப் வெளியீட்டு நிகழ்வின் (BOE's flexible OLED flagship launch event) போது வெளியிடப்படும்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைவர் லி ஜீ லூயிஸின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது 165 ஹெர்ட்ஸ் அல்ட்ரா-ரெஃப்ரெஷ் ரேட் சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கும். இது 6.78 இன்ச் அளவிலான பிஓஇ எக்ஸ்3 ஓஎல்இடி பேனலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும். மேலும் இந்த டிஸ்பிளே 1.5கே ரெசல்யூஷனையும் வழங்கலாம்.
நினைவூட்டும் வண்ணம் கடந்த 2019 இல் ஒன்பிளஸ் 7 ப்ரோ (OnePlus 7 Pro) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஒன்பிளஸ் நிறுவனமானது ஹை-ரெஃப்ரெஷ் விஷயத்தில் புதிய வரையறைகளை "செட்" செய்து வருகிறது. முதலில் 90ஹெர்ட்ஸ், பின்னர் 120ஹெர்ட்ஸ்-ஐ தொடர்ந்து ஓரியண்டல் டிஸ்பிளே சீரீஸையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது ஒன்பிளஸ் 15 வழியாக அடுத்தடுத்த கட்டங்களை எட்டவுள்ளது.
ஒன்பிளஸ் 15 எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? தொழில்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, 91மொபைல்ஸ் ஹிந்தி வலைத்தளம் ஆனது, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதே நாளில் இந்தியாவில் அறிமுகம் நடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்பாக நடக்கும் சீன அறிமுகத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சரியான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. சில லீக் தகவல்கள் இது வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கின்றன.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நம்பகமான டிப்ஸ்டர் ஆன பால்ட் பாண்டா (Bald Panda) வழியாக கிடைத்த லீக் தகவலின்படி ஒன்பிளஸ் 15 ஆனது மிகப்பெரிய 7300mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேட்டரி ஆகும்.
மேலும் இந்த பேட்டரி 120W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடனும் வரும் என்றும் டிப்ஸ்டர் பால்ட் பாண்டா வெளிப்படுத்தியுள்ளார். டிஸ்பிளேவை பொறுத்தவரை (முன்னரே குறிப்பிட்டபடி) 6.78-இன்ச் டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் காணப்படும் 6.82-இன்ச் டிஸ்பிளேவை விட சற்று சிறியதாகும். ஆக நாம் இன்னும் சிறிய "காம்பாக்ட் டிசைனை" எதிர்பார்க்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் 1/1.5-இன்ச் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இருக்கும், இது சோனி LYT-700 சென்சாராக இருக்கலாம். இதோடு சாம்சங் JN5 சென்சார் உடனான 50-மெகாபிக்சல் 1/2.76-இன்ச் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் இடம்பெறலாம். அல்ட்ரா-வைட் ஷாட்களுக்கு, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் மற்றொரு 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 சென்சார் பேக் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








