Home
Mobile

இந்த தீபாவளி எங்கள்து.. OnePlus 15 இந்திய அறிமுக தேதி, விலை, அம்சங்கள்!

ஒருவழியாக ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தேதி லீக் ஆகிவிட்டது. "ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 எலைட் (Snapdragon 8 Gen 5 Elite) சிப்செட் உடன் அறிமுகமாகும் முதல் சில ஸ்மார்ட்போன்கள் எது?" என்கிற போட்டி காரணமாக.. ஒன்பிளஸ் 15 ஆனது இம்முறை முன்கூட்டியே அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கிட்டத்தட்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் எல்லா அம்சங்களும் லீக் ஆகி இருந்தாலும் கூட, சீன அறிமுக தேதி, இந்தியா உட்பட உலகளாவிய அறிமுக தேதி குறித்து எந்த விவரங்களும் வெளியாகாமலேயே இருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியாக, தற்போது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் சீன அறிமுக தேதி மற்றும் உலகளாவிய அறிமுக தேதி (இந்திய அறிமுக தேதி) குறித்த விவரங்கள் லீக்காகியுள்ளன.

OnePlus 15 இந்திய அறிமுக தேதி, விலை, அம்சங்கள்!

தொழில்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, 91மொபைல்ஸ் ஹிந்தி வலைத்தளம் ஆனது, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அந்த வருகிற நவம்பர் 13 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதே நாளில் இந்தியாவில் அறிமுகம் நடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சீன அறிமுகத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இம் மாத இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சரியான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. சில லீக் தகவல்கள் இது வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கின்றன. இது தற்போது சீனாவில் முன்பதிவு செய்ய கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.65,000 - ரூ.75,000 என்கிற விலை வரம்பில்அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்; அதன் விலை சுமார் ரூ.44,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது (ஒன்பிளஸ் 15ஆர் ஆனது தனியான அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது).

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னரே குறிப்பிட்டபடி, சீன டெக் பிளாக்கர் (Chinese Tech Blogger) வழியாக, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முழு ஸ்பெக்ஸ் ஷீட்டும் ஆன்லைன் லீக் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 15 ஆனது 12ஜிபி+256ஜிபி, 12ஜிபி+512ஜிபி, 16ஜிபி+256ஜிபி, 16ஜிபி+512ஜிபி மற்றும் 16ஜிபி+1டிபி ஆப்ஷன்களில் அறிமுகமாகும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவுடன் 6.78-இன்ச் 1.5கே பிஓஇ எக்ஸ்3 டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் இது 1-165ஹெர்ட்ஸ் 8டி எல்டிபிஓ டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ப்ரோ எக்ஸ்டிஆர் (Pro XDR) ஆகிய டிஸ்பிளே அம்சங்களையும் கொண்டிருக்கும். இதோடு ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது - எச்டிஆர் விவிட் (HDR Vivid) மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) சான்றிதழ்களையும் பெறும்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது மேம்படுத்தப்பட்ட "வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) அங்கீகாரத்துடன் கூடிய அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பேக் செய்யும் சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் இடம்பெறும் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். அதில் ஓஐஎஸ் (OIS) ஆதரவு உடன் 50 மெகாபிக்சல் சோனி LYT-700 24மிமீ வைட் லென்ஸ், ஓஐஎஸ் உடன் 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 15மிமீ அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் ஓஐஎஸ் உடன் 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 85மிமீ டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவைகள் இடமபெறலாம்; கடைசி லென்ஸ் ஆனது 3.5எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங்கை வழங்கலாம்.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் ஒரு பெரிய 7300mAh பேட்டரி இடம்பெறலாம். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) இன் லேட்டஸ்ட் வெர்ஷனில் இயங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 India Global Launch Date Leaked Check Out Expected Price in India Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X