Home
Mobile

முடிச்சு விட்டான் OnePlus... 7300mAh பேட்டரி, 120W சார்ஜிங், 16GB ரேம் உடன் புது போன்!

ஒன்பிளஸ் நிறுவனம், இந்த அக்டோபர் மாத இறுதிக்குள் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இன்னுமும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி (Launch Date) உறுதிப்படப்படவில்லை. ஆனால் உலகளாவிய வெளியீட்டிற்கான டீஸர்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

இதற்கிடையில் ஒரு சீன டெக் பிளாக்கர் (Chinese Tech Blogger), ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலையை தவிர்த்து, மற்ற எல்லா விவரங்களையும் (கிட்டத்தட்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களையும், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கலர் ஆப்ஷன்களையும் கூட) வெளிப்படுத்தி உள்ளார்.

OnePlus: 7300mAh பேட்டரி, 120W சார்ஜிங், 16GB ரேம் உடன் புது போன்!

அதன்படி, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவுடன் 6.78-இன்ச் 1.5கே பிஓஇ எக்ஸ்3 டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் இது 1 - 165Hஹெர்ட்ஸ் 8டி எல்டிபிஓ டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ப்ரோ எக்ஸ்டிஆர் (Pro XDR) ஆகிய டிஸ்பிளே அம்சங்களையும் கொண்டிருக்கும்.

இதோடு ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது - எச்டிஆர் விவிட் (HDR Vivid) மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) சான்றிதழ்களையும் பெறும். பாதுகாப்பிற்காக, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது மேம்படுத்தப்பட்ட "வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) அங்கீகாரத்துடன் கூடிய அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பேக் செய்யும்

சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் இடம்பெறும் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இது LPDDR5X ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் 16GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் விருப்பங்கள் இருக்கலாம்

கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். அதில் ஓஐஎஸ் (OIS) ஆதரவு உடன் 50 மெகாபிக்சல் சோனி LYT-700 24மிமீ வைட் லென்ஸ், ஓஐஎஸ் உடன் 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 15மிமீ அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் ஓஐஎஸ் உடன் 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 85மிமீ டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவைகள் இடமபெறலாம்; கடைசி லென்ஸ் ஆனது 3.5எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங்கை வழங்கலாம்.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் ஒரு பெரிய 7300mAh பேட்டரி இடம்பெறலாம். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) இன் லேட்டஸ்ட் வெர்ஷனில் இயங்கும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது நெக்ஸ்ட் ஜெனரேஷன் வேப்பர் கூலிங் சிஸ்டம், ஒரு பெரிய பயோனிக் வைப்ரேஷன் மோட்டார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், மல்டி-ஃபங்க்ஸ்னல் என்எப்சி, ஒரு ஐஆர் பிளாஸ்டர், யூஎஸ்பி-ஐ (யூஎஸ்பி 3.2 ஜென் 1) மற்றும் தூசி மற்றும் தண்ணீருக்கு எதிராக ஐபி66 / ஐபி68 / ஐபி69 பாதுகாப்பு ஆகியவைகளுடன் அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது பல வகையான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது: 12ஜிபி+256ஜிபி, 12ஜிபி+512ஜிபி, 16ஜிபி+256ஜிபி, 16ஜிபி+512ஜிபி மற்றும் 16ஜிபி+1டிபி. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை சாண்ட் ட்யூன் கலர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதோடு பிளாக் மற்றும் பர்பிள் கலர்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 15 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஆனது முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 13 மாடலை விட குறைவாக இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. எக்ஸ் தளத்தில் @OnePlusClub வழியாக லீக் செய்யப்பட்டுள்ள விவரங்களின்படி, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்ட பேஸிக் வேரியண்ட்டின் விலை 3,999 யுவான்களாக இருக்கும்.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.49,700 ஆக இருக்கும். ஒப்பிடுகையில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அதே 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஆப்ஷன் சீனாவில் 4,499 யுவான்களுக்கு அறிமுகமானது. ஆக புதிய ஒன்பிளஸ் 15 ஆனது பழைய ஒன்பிளஸ் 15 உடன் ஒப்பிடும் போது மலிவான விலை நிர்ணயத்தை பெறும் என்பது போல் தெரிகிறது. சீன விலை மலிவாக இருந்தால், இந்திய விலையும் சற்று மலிவாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சீனாவில் இம்மாதம் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 15 நவம்பர் - டிசம்பரில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 Full Specifications Sheet leaked 7300mAh battery 120W Charging 16GB RAM and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X