Home
Mobile

அட OnePlus 13s கிடக்குது.. இப்படி ஒரு OnePlus போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. என்ன மாடல்? என்ன ஸ்பெஷல்?

ஒரு நியாயம் தர்மம் வேணாமா.. இன்னும் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனே இந்தியாவில் அறிமுகம் ஆகல.. நடுவுல ஒன்பிளஸ் 14 (OnePlus 14) அறிமுகம் வேற இருக்கு.. அதுக்குள்ள ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடலை பற்றி அப்டேட்-ஆ.. என்று கலாய்க்கும் படியாக.. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, சிப்செட், கேமரா செட்டப் மற்றும் பற்றடி குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன!

முன்னதாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா இருக்கலாம் என்கிற தங்கவல் வெளியானது. இதற்கிடையில் நம்பகமான டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக.. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் வெளிப்படுத்தி உள்ளார்.

இப்படி ஒரு OnePlus போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்!

டிப்ஸ்டரின் கூற்றுப்படி, தற்போது ஒன்பிளஸ் ​​பிராண்ட் மூன்று 50-மெகாபிக்சல் கேமரா செட்டப்பை சோதித்து வருகிறது, இதில் ப்ரைமரி கேமரா, அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் சுமார் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவைகள் அடங்கும். ப்ரைமரி கேமரா இரண்டு பதிப்புகளில் பரிசீலிக்கப்படுகிறது - ஒன்று ஸ்டாண்டர்ட் ஆன பெரிய சென்சார் மற்றும் மற்றொன்று அல்ட்ரா-லார்ஜ் சென்சார்.

டெலிஃபோட்டோ கேமராவிற்காக, ஒன்பிளஸ் நிறுவனம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பெரிஸ்கோப் சென்சார் விருப்பங்களை சோதித்து வருகிறது. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் கேமராவிற்கான உகந்த கலவையைத் தீர்மானிக்க இந்த அமைப்புகள் அனைத்தும் தற்போது ஏ/பி சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் டிப்ஸ்டர் வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், இதே டிப்ஸ்டர் வழியாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் மற்ற சில முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. அதன்படி ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷனை ஆதரிக்கும் ஒரு பிளாட் டிஸ்பிளேவுடன் சோதிக்கப்படுகிறது. கடந்த 2019 இல் அறிமுகமான ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் நிறுவனம் 2கே கர்வ்டு எட்ஜ் டிஸ்பிளேவை தான் வழங்கி வருகிறது; ஆக இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.

டிஸ்பிளே வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தை தவிர, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது புதிய பின்புற வடிவமைப்பை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றம் ஆப்பிள் ஐபோன் மாடலை போலவே இருக்கலாம். பேட்டரியை பொருத்தவரை இது 6500mAh+ பேட்டரியை 100W பாஸ்ட் சார்ஜிங்குடன் பேக் செய்யக்கூடும் என்று தெரிகிறது. மேலும் இது 50W வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கக்கூடும்.

ஒன்பிளஸ் 13எஸ் ஆக இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே

- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)

- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்

- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 4 மைக்ரோஃபோன்கள்
- டால்பி அட்மாஸ்
- அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ
- எடையில் 185 கிராம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15 Design Display Chipset Camera Battery Specifications Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X