Home
Mobile

ஓஹோ.. விஷயம் அப்படி போகுதோ.. அவசரப்பட்டு OnePlus 13s மாடலை வாங்கிடாதீங்க.. ஏன்னா?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடல் ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஆக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது - அதே மாடல் பெயரின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்பதே சில ஒன்பிளஸ் ரசிகர்களின் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது

ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனத்தின் டி-சீர்ஸ் மாடல்களுக்கு ஒரு தனி "ரசிகர் பட்டாளமே" உள்ளது. இதற்கிடையில் "அவர்களுக்கு" ஒன்பில்ஸ் 13எஸ் மாடலை வாங்காமல் தவிர்ப்பதற்கு இன்னொரு காரணமும் கிடைத்து உள்ளது. அது ஒன்பிளஸ் 14 (OnePlus 14) ஸ்மார்ட்போன் ஆகும்!

அவசரப்பட்டு OnePlus 13s மாடலை வாங்கிடாதீங்க.. ஏன்னா?

2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பல்வேறு பிராண்டுகள் (ஷாவ்மீ, ஒப்போ, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள்) தத்தம் புதிய ஃபிளாக்ஷிப் போன்களை அறிமுகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 16 சீரீஸ் ஸ்மார்ட்போனை 2025 செப்டம்பரில் வெளியிடக்கூடும் என்றும், மற்ற பிராண்டுகளின் ஃபிளாக்ஷிப் போன்கள் 2025 அக்டோபரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சு வழியாக கிடைத்த லேட்டஸ்ட் தகவல்கள், இந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 14 ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகின்றன. குறிப்பிட்ட டிப்ஸ்டரின் கூற்றுப்படி,ஒப்போ மற்றும் அதன் துணை பிராண்ட் ஆன ஒன்பிளஸ் - இந்த ஆண்டு 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.

அதாவது ஒன்பிளஸ் 14 ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். விவோ (Vivo), ஷாவ்மீ (Xiaomi) மற்றும் ஹானர் (Honor) போன்ற பிராண்டுகள் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் "200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா" கிளப்பில் சேருகின்றன என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒன்பிளஸ் 14 மாடலில் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா தவிர்த்து ஒரு பிளாட் ஆன டிஸ்பிளே, ஒரு பெரிய பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப்செட் ஆகிய அம்சங்களும் இடம்பெறலாம். முன்னரே குறிப்பிட்டபடி இது 2025 அக்டோபரில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்; பின்னர் 2026 ஜனவரி வாக்கில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள்: சீனாவில் து மார்னிங் மிஸ்ட் கிரே, ஹார்ட்-த்ரே பிங்க் மற்றும் கிளவுடி இங்க் பிளாக் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.39,805 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.42,150 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.44,490 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.46,835 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.52,690 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஒன்பிளஸ் 13டி முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே

- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)

- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 14 To Feature 200MP Periscope Telephoto Camera Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X