யாரு சாமி அவன்.. 6260mAh பேட்டரி.. SONY கேமரா.. 50MP டெலிபோட்டோ.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஆப்பிள் போன்களை தூக்கி சாப்பிடும்படியான டிசைன் மட்டுமல்லாமல், 6260mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) போன் வெளியாக இருக்கிறது. கேமரா பீச்சர்கள் உறுதியாகியதை அடுத்து இப்போது பேட்டரி பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13டி போனின் பீச்சர்கள் எப்படி? விலை எவ்வளவு இருக்கும்? எப்போது வெளியாக இருக்கிறது? முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி இந்த போன் அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் குளோபல் வெளியீடு நடக்க இருப்பதால், இதன் எதிர்பார்ப்பார்ப்பு ஒட்டுமொத்த ஒன்பிளஸ் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. ஏனென்றால், ஐபோன்களுக்கு நிகரான டிசைனில் கஸ்டமைசபிள் பட்டனுடன் வெளியாக இருக்கிறது.

இந்த ஒன்பிளஸ் 13டி போனின் முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்தாலும், ஒவ்வொரு பீச்சராக ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துவருகிறது. அப்படி டிசைன், கேமரா பீச்சர்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக வெளியாகின. இப்போது, பேட்டரி பீச்சர்களும் வெளியாகி இருக்கிறது. இந்த பீச்சர்களையும், மார்கெட்டில் கசிந்த பீச்சர்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் 13டி அம்சங்கள் (OnePlus 13T Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் 6260mAh பேட்டரி வருகிறது. ஆனால், வெறும் 185 கிராம் எடை மட்டுமே வருகிறது. இதைவிட கம்மியான பேட்டரி கேபாசிட்டி கொண்ட மற்ற பிரீமியம் மாடல்களின் எடை 200 கிராம்களுக்கும் அதிகமாக இருக்கிறது. ஆனால், இதில் லைட்-வெயிட்டில் பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, பிரீமியமான காம்பாக்ட் மாடலாக இந்த ஒன்பிளஸ் 13டி போனை எதிர்பார்க்கலாம். இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. கேமராவை பார்க்கையில் ஐபோன்களை போல டிசைன் வருவதால், இதிலும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
50 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோவில் 4X லாஸ்-லெஸ் ஜூமிங், 2X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. ஷேடோலெஸ் கேப்ச்சர் (Shadowless Capture), அல்ட்ரா-கிளியர் லைவ்போட்டோ (Ultra-clear Livephoto) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. டிசைனை பார்க்கையில், அலெர்ட் ஸ்லைடருக்கு பதிலாக கஸ்டமைசபிள் பட்டன் கிடைக்கிறது.
மார்னிங் மிஸ்ட் கிரே (Morning Mist Gray), கிளவுட் இன்ங் பிளாக் (Cloud Ink Black) மற்றும் ஸ்பெஷல் பிங்க் (Special Pink) கலர்களில் கிடைக்க இருக்கிறது. அதேபோல மெட்டல் மிடில் ஃபிரேம் (Metal Middle Frame) மற்றும் கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (Crystal Sheild Glass) பாதுகாப்பு கிடைக்க இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்க இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில், இந்த போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.32 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்க இருக்கிறது.
இந்த ஒன்பிளஸ் 13டி போனின் ஆரம்ப விலை ரூ.55,000 பட்ஜெட்டில் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதிக்கு பிறகு குளோபல் வெளியீடு உறுதி செய்யப்படும். அப்போது விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துவிடும்.


Click it and Unblock the Notifications








