தீயா இருக்கே.. புது OnePlus போன்.. டபுள் 50MP கேமரா, 6000mAh பேட்டரி, 80W சார்ஜிங்.. என்ன மாடல்? என்ன விலை?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த 3 மாடல்களுமே 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடலும் அடங்கும். இது ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) என்கிற பெயரில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இதோடு சேர்த்து ஒன்பிளஸ் ஏஸ் 5வி (OnePlus Ace 5V) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் (OnePlus Ace 5S) ஆகிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களும் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம்.இவைகள் நோர்ட் சீரீஸ்-ன் (OnePlus Nord Series) கீழ் இந்திய சந்தைக்கு வரவும் வாய்ப்புள்ளது. ஆனால் ஒன்பிளஸ் 13டி அல்லது ஒன்பிளஸ் 13 மினி எந்த பெயர் மாற்றமும் இல்லாமல், சீன அறிமுகத்தை தொடர்ந்து, இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் 13டி அல்லது ஒன்பிளஸ் 13 மினி என்ன விலைக்கு அறிமுகமாகும் (OnePlus 13T or OnePlus 13 Mini Price Expected)? ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் மாடலாக அறிமுகமாகலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இதன் பொருள் தற்போது மலிவான ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஸ்மார்ட்போன் என்கிற பட்டத்தை வைத்திருக்கும் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேஸிங் எடிஷனை (சுமார் ரூ.37,000) விட மலிவானதாக இருக்கலாம்.
ஒன்பிளஸ் 13டி அல்லது ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம் (OnePlus 13T or OnePlus 13 Mini Specifications Expected)?
- 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.31-இன்ச் LTPO OLED டிஸ்பிளே
- OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 6000mAh பேட்டரி
- 80W பாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- ஷார்ட்-ஃபோகஸ் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- மெட்டல் மிடில் பிரேம் மற்றும் கிளாஸ் பேக் டிசைன்
- சர்குலர் கேமரா டூயல் ரியர் செட்டப்
புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ் நிறுவனம், 10000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 எலைட், 13.2-இன்ச் டிஸ்பிளே கொண்ட புதிய டேப்லெட் ஒன்றையும் விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) டேப்லெட் ஆகும்.
ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 16 ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1 TB வரை UFS 4.0 ஸ்டோரேஜை பேக் செய்யலாம். இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 15 க்கான கலர்ஓஎஸ்ஸில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சுமார் 10,000mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோவில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம். ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும். பெரும்பாலும் இது ஒப்போ பேட் 4 ப்ரோவை (Oppo Pad 4 Pro) போலவே இருக்கும். விலை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. Photo courtesy: Weibo / Gizchina.com


Click it and Unblock the Notifications








