ஏப்.30 முதல் விற்பனை.. Mini போனாக OnePlus 13T அறிமுகம்.. 6260mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்.. விலை?
சொன்னபடியே ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அதன் 13 சீரிஸின் கீழ் புதிய மாடல் ஆக ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கனவே 13 சீரீஸின் கீழ் உள்ள ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போன்களுடன் இணைகிறது. ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இது மார்னிங் மிஸ்ட் கிரே, ஹார்ட்-த்ரே பிங்க் மற்றும் கிளவுடி இங்க் பிளாக் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.39,805 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.42,150 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.44,490 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.46,835 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.52,690 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் இப்போது சீனாவில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் அங்கே விற்பனைக்கு வரும். இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் எப்போது ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்கிற எந்த விவரங்களும் பகிரப்படவில்லை. ஆனால் நிச்சயம் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.ஏனென்றால் முன்னர் வெளியான டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைக்கு வந்துள்ளன. இந்திய அறிமுகம் குறித்த தகவல் கிடைத்ததும் உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்,
ஒன்பிளஸ் 13டி முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே
- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 4 மைக்ரோஃபோன்கள்
- டால்பி அட்மாஸ்
- அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ
- எடையில் 185 கிராம்.


Click it and Unblock the Notifications








