Home
Mobile

ஏப்.24-ல் அறிமுகமாகும் புதிய OnePlus போன்.. 6200mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 24-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்புடன் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மார்னிங் மிஸ்ட் கிரே (Morning Mist Gray), கிளவுட் இங்க் பிளாக் (Cloud Ink Black)மற்றும் பிங்க் (Pink) நிறங்களில் இந்த புதிய ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் ஏற்கனவே வெளியான இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏப்.24-ல் அறிமுகமாகும் புதிய OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 13டி அம்சங்கள் (OnePlus 13T Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Gen 3 Elite SoC) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 13டி போன் வெளிவரும். இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

6.31-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உடன் ஒன்பிளஸ் 13டி போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு ஏஐ அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 6200mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

5ஜி, 4ஜி எல்இடி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் 13டி போனில் உள்ளது. மேலும் மெட்டல் மிடில் பிரேம் மற்றும் கிளாஸ் பேக் டிசைன் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் போன். அதேபோல் இந்த போனில் Quick Key பட்டன் வசதியும் உள்ளது. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, இந்த புதிய ஒன்பிளஸ் போன் ரூ.54,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13T launch date revealed: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X