இந்தியாவுக்கு வரும் புதிய OnePlus போன்.. 6200mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்து ஒன்பிளஸ் 13டி(OnePlus 13T) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது புதிய ஒன்பிளஸ் போன் இந்த ஏப்ரல் மாதம் இறுதியில் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் 2025 மே அல்லது ஜூன்-க்குள் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் மற்ற ஒன்பிளஸ் போன்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பல கூடுதலான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 13டி போன் வெளிவரும்.
Quick Key பட்டன், அமோலெட் டிஸ்பிளே, தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 13டி அம்சங்கள் (OnePlus 13T Specifications): 6.31-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமோலெட் டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Gen 3 Elite SoC) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 13டி போன் வெளிவரும். இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உடன் ஒன்பிளஸ் 13டி போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு ஏஐ அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6200mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
5ஜி, 4ஜி எல்இடி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் 13டி போனில் உள்ளது. மேலும் மெட்டல் மிடில் பிரேம் மற்றும் கிளாஸ் பேக் டிசைன் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் போன். அதேபோல் பட்ஜெட் விலையில் ஒன்பிளஸ் 13டி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: mysmartprice


Click it and Unblock the Notifications