சீனாக்காரன் மூளையே தனி.. பேனா மீது நிலைநிறுத்தினால்.. OnePlus 13T ஸ்மார்ட்போன் செய்யும் மேஜிக்!
ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள், ஒரு புதிய மினி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதை ஏற்கனவே உறுதிப்படுத்தி விட்டது. அது ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் பல்வேறு முக்கிய அம்சங்களை தொடர்ந்து வெளிப்படுத்தியும் வருகிறது.
அப்படியாக ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் பிளாட் டிஸ்ப்ளேவை வெளிபடுத்திய பிறகு, ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லூயிஸ் லீ, ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சத்தை வெளிப்படுத்துகிறார்: அது ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் எடை விநியோகம் (Weight distribution) ஆகும். ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பேனாவின் மீது நிலைநிறுத்தப்பட்டு, அது எப்படி 50:50 எடை விநியோகத்தை கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்திம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது பார்ப்பதற்கே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. குறிப்பாக ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது 6000+ mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்பதை கருத்தில் கொண்டால், இந்த ஸ்மார்ட்போனின் எடை பெரும்பாலும் கீழ் பாதியில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இருக்காது என்பது போல் தெரிகிறது
எல்லாவற்றை விட முக்கியமான ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது வெறும் 185 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது 210 கிராம் எடை கொண்ட ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை விட இது இலகுவானதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது - சரியான எடை விநியோகத்துடன் இணைக்கப்பட்ட லைட் வெயிட் சேசிஸ் உடன் சேர்ந்து ஒரு வசதியான இன்-ஹேண்ட் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் என்பது போல் தெரிகிறது.
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் டிசைன் மற்றும் சக்திவாய்ந்த இன்டர்னல்களின் கலவையுடன் கூடிய ஒரு சிறிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும். அறியாதோர்க்கு இது சிறிய அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்பதால் தான் ஒன்பிளஸ் 13 மினி என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இது ஒன்பிளஸ் 13டி என்கிற பெயரில் தான் வெளியாகும்; ஆனால் சிறிய அளவிலான டிஸ்பிளேவைத்தான் கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த புகைப்படங்கள் வழியாக, ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது வரவிருக்கும் ஒப்போ 13 சீரீஸில் (Oppo 13 Series) இருப்பதை போன்ற ரியர் டிசைனை காட்டுகிறது. இரண்டுமே ஒரு சதுர வடிவிலான கேமரா யூனிட்டை (Square camera unit) காட்டுகின்றன.
அதில் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட 2 கேமராக்கள் உள்ளன. அதனுடன் ஒரு எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஒரு சென்சாரும் உள்ளது. மேலும் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் (Dual Rear Camera Setup) 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஊடான 6.3 ஓஎல்இடி டிஸ்பிளே மற்றும் உட்பொதிக்கப்பட்ட ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Optical Fingerprint Sensor) உடன் வரலாம். ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் மிகப்பெரிய 6200mAh பேட்டரியை பேக் செய்யும். இது ஒன்பிளஸ் 13 மாடலில் இருப்பதை விட பெரிய பேட்டரி ஆகும். ஒன்பிளஸ் 13 மாடலில் 6000mAh பேட்டரி மட்டுமே உள்ளது.
கடைசியாக ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை இது சீனாவில், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.54,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். சீன அறிமுகத்தை தொடர்ந்து ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது இதே மாடல் பெயரின் கீழ் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








