அண்ணன் வரார் வழிவிடு.. தெறிக்க விடும் OnePlus 13T கேமராக்கள்.. அல்டிமேட் விலையில் ஏப்ரல் 24 அறிமுகம்!
ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் காம்பாக்ட் பவர்ஹவுஸ் ஆக ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T) ஸ்மார்ட்போனிற்கு பிறகு ஒன்பிளஸ் நிறுவனத்தின் டி-சீரிஸின் கீழ் அறிமுகமாகும் மாடலாக இருக்கும்.
அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலைப்பாட்டில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் என்னென்ன சென்சார்கள் உள்ளன? இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? எப்போது இந்திய அறிமுகம்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 13டி கேமராக்கள் (OnePlus 13T Cameras): ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் 50அம்பி சோனி ப்ரைமரி கேமராவை கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போ (Weibo) வழியாக இது "அதே ப்ரைமரி கேமராவை" கொண்டிருப்பதாக ஒன்பிளஸ் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் உள்ள அதே ப்ரைமரி சென்சாரை குறிக்கலாம்.
இது 2x ஜூம் மற்றும் 4x லாஸ்லெஸ் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸையும் கொண்டிருக்கும்.
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் கேமராக்கள் ஒப்போ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போலவே, அதே இமேஜ் அல்காரிதத்தை கொண்டிருப்பதும் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. கடைசியாக ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில், 3 செக்கென்ட் லைவ் போட்டோ மோட் கிடைக்கும்.
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யப்படலாம் (OnePlus 13T Specifications Expected)? ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் கொண்ட மலிவான ஃபிளாக்ஷிப் மாடலாக வரக்கூடும். ஆனால் விலை விவரங்கள் இன்னும் வெளிப்படையாக லீக் ஆகவில்லை.
டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் 6.32-இன்ச் டிஸ்பிளே இடம்பெறலாம். இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் உடன் கூடிய LTPO AMOLED பேனலை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,200mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் வரலாம்
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் (OnePlus 13T India Launch)? இது என்ன விலைக்கு வரும் (OnePlus 13T Price)? ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இது நிச்சயம் இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இது ரூ.54,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (OnePlus 10T 5G Specifications):
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 2400 x 1080 பிக்சல் ரெசல்யூஷன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP மெயின் கேமரா + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2MP டெப்த் சென்சார்
-16MP செல்பீ கேமரா
- ஜிபிஏ 3.0 உடனான ஹைப்பர்பூஸ்ட் கேமிங் எஞ்சின்
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்பிளஸ்-ன் சொந்த ஆக்சிஜன் ஓஎஸ்
- 150W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4800mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








