அண்ணன் வரார் ஓரம்போ.. OnePlus 13T அறிமுகத்திற்கு ரெடி.. எப்போது? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
2022 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஒன்பிளஸ் நிறுவனம் எந்த டி சீரீஸ் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவில்லை. அதாவது ஒன்பிளஸ் 11டி, ஒன்பிளஸ் 12டி ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படவில்லை. அதேதான் ஒன்பிளஸ் 13 சீரீஸிலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதன் விளைவாகவே ஒன்பிளஸ் 13 சீரீஸில் புதிய மாடல் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது என்கிற தகவல்கள் வெளியான போது, அது ஒன்பிளஸ் 13டி ஆக இருக்காது; மாறாக ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனாக இருக்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்பிளஸ் நிறுவனமோ ஏப்ரல் 2205 இல் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இது சிறிய அளவில் இருக்கும் என்று கூறப்பட்டதால் தான் , இது ஒன்பிளஸ் 13 மினி ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்பிளஸ் நிறுவனம் பெயர் மாற்றத்தை விரும்பவில்லை என்பது போல் தெரிகிறது. சிறிய வடிவ காரணியைக் கொண்டிருந்தாலும், ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய 6,000mAh+ பேட்டரி இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சாத்தியமான ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது எம்ஐஐடி (MIIT) சான்றிதழை பெற்றுள்ளது மற்றும் அன்டுடு (AnTuTu) பெஞ்ச்மார்க்கில் காணப்பட்டுள்ளது. அன்டுடு பெஞ்ச்மார்க் ஆனது ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. எம்ஐஐடி லிஸ்டிங் வழியாக ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது 5G, 4G LTE ஆதரவை வெளிப்படுத்துகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வரலாம் என்பதையும் வெளிப்படுத்துகிறது
அன்டுடு லிஸ்டிங் ஆனது ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் மொத்த மதிப்பெண் 3,006,913 ஆகும் என்பதை காட்டுகிறது, இதில் சிபியு, ஜிபியு, ஸ்டோரேஜ் மற்றும் யுஎக்ஸ் ஆகியவைகள் அடங்கும். இந்தப் பட்டியலில் சிபியு மதிப்பெண் 678,498 ஆகவும், ஜிபியு மதிப்பெண் 1,268,838 ஆகவும், ஸ்டோரேஜ் (LPDDR5x + UFS 4.0) மதிப்பெண் 569,999 ஆகவும் மற்றும் யுஎக்ஸ் மதிப்பெண் 489,578 ஆகவும் உள்ளன.
பெஞ்ச்மார்க்கில் வேரியண்ட் 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜை கொண்டதாக இருக்கலாம். அறிமுகத்தின் போது நிச்சயம் வேறு சில ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் இருக்கும். ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் டிசைன் மற்றும் சக்திவாய்ந்த இன்டர்னல்களின் கலவையுடன் கூடிய ஒரு சிறிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும்.
ஒன்பிளஸ் 13டி வேறு ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த புகைப்படங்கள் ஆனது ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது வரவிருக்கும் ஒப்போ 13 சீரீஸில் (Oppo 13 Series) இருப்பதை போன்ற ரியர் டிசைனை காட்டுகிறது.
இரண்டுமே ஒரு சதுர வடிவிலான கேமரா யூனிட்டை (Square camera unit) காட்டுகின்றன. அதில் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட 2 கேமராக்கள் உள்ளன. அதனுடன் ஒரு எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஒரு சென்சாரும் உள்ளது. மேலும் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் (Dual Rear Camera Setup) 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஒரு லேட்டஸ்ட் லீக் தகவலின்படி, ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் மிகப்பெரிய 6200mAh பேட்டரியை பேக் செய்யும். இது ஒன்பிளஸ் 13 மாடலில் இருப்பதை விட பெரிய பேட்டரி ஆகும். ஒன்பிளஸ் 13 மாடலில் 6000mAh பேட்டரி மட்டுமே உள்ளது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஊடான 6.3 ஓஎல்இடி டிஸ்பிளே மற்றும் உட்பொதிக்கப்பட்ட ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Optical Fingerprint Sensor) உடன் வரலாம். ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை இது சீனாவில், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.54,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications