Home
Mobile

இது OnePlus சம்பவம்.. மிட்-ரேஞ்ல 6260mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டுக்கு வருமா? வராதா? என்று வெயிட்டிங் செய்ய வைத்த மிட்-ரேஞ்ச் பட்ஜெட் ஒன்பிளஸ் (OnePlus) போனின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளேவுடன் வெளியாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் புரொடெக்சன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6260mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் போன்ற பீச்சர்களுடன் ஒன்பிளஸ் 13டி போன் (OnePlus 13T) சீன மார்கெட்டில் வெளியாகியது.

இது OnePlus சம்பவம்.. மிட்-ரேஞ்ல 6260mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே!

ஏப்ரல் 30ஆம் தேதி அங்கு விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதனிடையே இந்த போனானது ஒன்பிளஸ் 13எஸ் மாடலாக இந்தியாவில் ரீபிராண்ட செய்யப்பட இருப்பதாக மார்கெட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்தன. அதோடு இந்த போனுக்கான எதிர்பார்ப்பும் எகிறியது. ஆனால், ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம், அதை உறுதி செய்யாமல் இருந்தது.

இப்போது, அதிகாரப்பூர்வமாக சிப்செட், டிஸ்பிளே, டிசைன் மற்றும் கலர் விவரங்களுடன் இந்தியாவில் வெளியாக இருப்பதை உறுதி செய்துள்ளது. கூடுதலாக அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருப்பதையும் உறுதி செய்துள்ளது. இதனால், ஒன்பிளஸ் பிரியர்கள் படுகுஷியாகிவிட்டனர். எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புக்கும் சென்றுவிட்டனர்.

சீனாவில் ஏப்ரல் 30ஆம் தேதி விற்பனைக்கு வர இருப்பதால், அந்த தேதியில் வெளியீட்டு விவரங்கள் தெரிய வர வாய்ப்புள்ளது. டிசைனில் பெரிய மாற்றம் இல்லை. சீன வேரியண்ட்டை போல இருக்கிறது. ஆனால், இங்கு கிரே (Grey) மற்றும் பிங்க் (Pink) கலர்களில் மட்டுமே வெளியாக இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் வருவது உறுதியாகி இருக்கிறது.

அதேபோல 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பீச்சர்களை மட்டுமே ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இருப்பினும், இது ஒன்பிளஸ் 13டி போனின் ரீபிராண்ட் வெர்ஷன் என்பது உறுதியாகிவிட்டதால், அந்த போனின் பீச்சர்கள் மற்றும் விலையை தெரிந்து கொள்ளலாம். இந்திய வெர்ஷனும் அப்படித்தான் இருக்கும்.

ஒன்பிளஸ் 13டி அம்சங்கள் (OnePlus 13T Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. ஆனால், இந்திய வெர்ஷனில் ஆக்ஸிஜன் ஓஎஸ் கிடைப்பது உறுதியாகும். ஏனென்றால், இங்கு கலர்ஓஸ் ஓப்போவில் வருகிறது.

6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (OPPO Crystal Shield Glass) பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13டி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

மேலும், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 6260mAh பேட்டரி, IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதே பீச்சர்களுடன் ஒன்பிளஸ் 13எஸ் இந்தியாவில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல சீன மார்கெட்டில் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.39,805ஆக இருக்கிறது. ஆகவே, இங்கேயும் இதே பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13s With Snapdragon 8 Elite India Launch Officially Confirmed Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X