Home
Mobile

இது செம்ம ப்ரோ.. புது OnePlus-க்கு வருது ஒரு பட்டன்.. ஒரே கிளிக் போதும்.. இதுலாம் அண்டர் கன்ட்ரோல்தான்!

ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்களில் கிடைத்ததை போலவே பிகிகல் பட்டன் மூலம் பல்வேறு ஃபங்ஷன்களை அக்சஸ் செய்யும்படி ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) போனிலும் பிளஸ் கீ (Plus Key) பட்டன் கிடைக்க இருப்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த பிளஸ் கீ மூலம் என்னென்ன பீச்சர்களை அக்சஸ் செய்யலாம்? இந்த ஒன்பிளஸ் 13எஸ் போன் எப்போது வெளியாக இருக்கிறது? டிஸ்பிளே, கேமரா, சிப்செட் பீச்சர்கள் எப்படி இருக்கும்? ஆகிய விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 6.32 இன்ச் டிஸ்பிளே மற்றும் பிளஸ் கீ பீச்சர்களுடன் ஒன்பிளஸ் 13எஸ் போன் வெளியாக இருக்கிறது. இந்த போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், விரைவில் வெளியாகும் என்றும் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வரும் என்றும் ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது செம்ம ப்ரோ.. புது OnePlus-க்கு வருது ஒரு பட்டன்.. கிளிக் போதும்!

இதில் பிளஸ் கீ பீச்சர்கள் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த பிசிகல் பட்டன் மூலம் பல்வேறு ஃபன்ஷங்களை அக்சஸ் செய்து கொள்ளலாம். ஆகவே, சவுண்ட் & வைப்ரேஷன், ஃபிளாஷ் லைட், ஒன்-கிளிஸ் ஃபிளாஷ் மெமரி, கேமரா போன்றவற்றை கன்ட்ரோல் செய்யலாம். மேலும், ரெக்கார்டிங், டிரான்ஸ்லேட், ஸ்கிரீன்ஷாட் மற்றும் நோ ஆக்சன் போன்ற ஃபங்ஷன்களும் வருகிறது.

இந்த ஒன்பிளஸ் 13எஸ் போனானது, ஏற்கனவே சீன மார்கெட்டில் வெளியான ஒன்பிளஸ் 13டி போனின் ரீபிராண்ட் வெர்ஷாகும். சிப்செட், டிசைன், இப்போது பிளஸ் கீ போன்ற அனைத்து பீச்சர்களும் அந்த போனுடன் ஒத்துப்போகிறது. ஆகவே, அந்த ஒன்பிளஸ் 13டி போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதில் கலர்களில் மட்டும் மாற்றங்கள் இருக்கும்.

ஒன்பிளஸ் 13டி அம்சங்கள் (OnePlus 13T Specifications): இந்த வேரியண்ட்டில் பிளாக், பிங்க் மற்றும் கிரே கலர்கள் கிடைத்தன. ஆனால், இந்திய வெர்ஷனில் கிரே வேரியண்ட் கிடைக்காது. பிளாக் மற்றும் பிங்க் மட்டுமே கிடைக்க இருக்கிறது. ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் பாதுகாப்பு கொண்ட 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

மேலும், 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட் இந்திய வெர்ஷனில் முதலில் உறுதி செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு கலரஓஎஸ் 15 கிடைக்கிறது.

ஆனால், இந்திய வெர்ஷனில் வழக்கமாக கிடைக்கும் ஆக்ஸிஜன் ஓஎஸ் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. 50 எம்பி மெயின் கேமரா (ஓஐஎஸ் டெக்னாலஜி) + 50 எம்பி டெலிபோட்டோ (ஓஐஎஸ் டெக்னாலஜி) கொண்ட டூயர் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்906 (SONY IMX906) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது.

மினி டிஸ்பிளேவிலும் 6260mAh பேட்டரி கொடுக்கிறது. இந்த பெரிய பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. சீன மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.39,805ஆக இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் இந்த ஒன்பிளஸ் போனை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13s With Plus Key A Multiple Function Customizations Feature Check New Physical Control
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X