Home
Mobile

OnePlus வச்சி செஞ்சிட்டாப்ல.. ஆஃபரில் 5850mAh பேட்டரி 5G போன்.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா!

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்தப்படியாக ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், தனியிடத்தை பிடித்துள்ளது. இதில் 13 சீரிஸ் மாடல்கள் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றன. இதில் 5850mAh பேட்டரியுடன் வெளியான ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போன் தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரியை கொண்ட ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனுக்கு 7 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.53,899 விலைக்கு வாங்க கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,695 தள்ளுபடியையும் பெற்று கொள்ளலாம். இந்த தள்ளுபடியை பெற்றால், ரூ.51,204 விலைக்கு ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

OnePlus வச்சி செஞ்சிட்டாப்ல.. ஆஃபரில் 5850mAh பேட்டரி 5G போன்!

ஒன்பிளஸ் 13எஸ் அம்சங்கள் (OnePlus 13s Specifications): எப்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த ஒன்பிளஸ் 13எஸ் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் பி3 கலர் காமட் கொடுக்கப்பட்டு உள்ளது.

வீடியோ கலர் என்ஹான்ஸர் (Video Color Enhancer), ஸ்கிரீன் கலர் மோட் (Screen Color Mode) மற்றும் கலர் விஷன் என்ஹான்ஸ்மெண்ட் (Color Vision Enhancement) கிடைக்கிறது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision) கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட் கிடைக்கிறது.

4 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூகிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிடைக்கிறது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) கிடைக்கிறது. இதில் ஏஐ பிளஸ் மைண்ட் (AI Plus Mind), ஏஐ சர்ச் (AI Search), ஏஐ வாய்ஸ்ஸ்கிரிப் (AI VoiceScribe), ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation), ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant) கிடைக்கிறது.

50 எம்பி வைடு மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமராவை இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 2X ஆப்டிகல் ஜூம் (Optical Zoom), 20x டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 700 (Sony LYT 700) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது.

ஆட்டோ போகஸ் கொண்ட 32 எம்பி செல்பீ கேமராவை இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஏஐ கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. ஏஐ ரீஃபிரேம் (AI Reframe), ஏஐ டீட்டெயில் பூஸ்ட் (AI Detail Boost), ஏஐ அன்பிளர் (AI Unblur), ஏஐ ரெஃப்ளெக்சன் எரைசர் (AI Reflection Eraser) உள்ளது. 4K ரெசொலுஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் ஓரியாலிட்டி ஆடியோ (OReality Audio) கிடைக்கிறது. கிரீன் சில்க் (Green Silk), பிங்க் சாடின் (Pink Satin) மற்றும் பிளாக் வெல்வெட் (Black Velvet) ஆகிய கலர்களில் இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus 13s With 5850mAh Battery 80W Charging Sony Camera Available At 7 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X