ஜூன்.5 குறிச்சாச்சு.. 6260mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. புது OnePlus போன்!
இந்த ஒன்பிளஸ் மாடல் வரட்டும், மற்ற மாடல்களை அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லும்படி மரண வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த மாடலென்று சொன்னால், அது ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஆகவே இருக்க முடியும். ஏனென்றால், இந்தியாவில் அவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது, அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போனுக்கு லைப் டைம் டிஸ்பிளே வாரண்டி கிடைப்பதால், ஒன்பிளஸ் பிரியர்கள் டபுள் குஷியில் இருக்கின்றனர். இந்த ஒன்பிளஸ் 13எஸ் மாடலின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
இந்திய மார்கெட்டில் ஜூன் 5ஆம் தேதி இந்த ஒன்பிளஸ் 13எஸ் போன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஆர்டருக்கு கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது, எதிர்பார்க்கப்பட்ட தேதியும் உறுதியாகிவிட்டது. இந்த தேதிக்கு முன்பாக லைப் டைம் டிஸ்பிளே வாரண்டி கொடுக்கப்படும் என்பதை ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம் உறுதி செய்தது.

இதற்கு முன்பு வெளியான சில மாடல்களின் டிஸ்பிளேவில் கிரீன் லைன் கோளாறு ஏற்பட்டது. இதை சரி செய்ய அடுத்தடுத்து வந்த பிரீமியம் மாடல்களுக்கு லைப் டைம் டிஸ்பிளே வாரண்டி கொடுக்கப்பட்டது. ஏற்கனவே, ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) போன்களுக்கு டிஸ்பிளே வாரண்டி கொடுக்கப்பட்டது. இப்போது, ஒன்பிளஸ் 13எஸ் மாடலுக்கும் கிடைக்க இருக்கிறது.
இந்த வாரண்டி மூலம் சாப்ட்வேர் லெவல் பிரச்சனைகள் மட்டுமே சரி செய்து கொடுக்கப்படும். ஆகவே, வெளிப்புற சேதம் (External Damage) நேரிடும்பட்சத்தில் அதற்கு வாரண்டியை கிளைம் செய்ய முடியாது. இந்த வெளியீட்டு தேதிக்கு முன்பாக கலர் வேரியண்ட்கள், பிளஸ் கீ பட்டன், சிப்செட் மற்றும் டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டன. இதை தெரிந்து கொள்வோம்.
ஒன்பிளஸ் 13எஸ் அம்சங்கள் (OnePlus 13s Specifications): இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட உடனேயே குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Elite SoC) கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 6.32 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருப்பதும், பிளஸ் கீ (Plus Key) பட்டன் வர இருப்பதும் உறுதியானது.

மேலும், பிளாக் வெல்வெட் (Black Velvet), பிங்க் சாடின் (Pink Satin) மற்றும் கிரீன் (Green) ஆகிய மூன்று கலர்களில் வெளியாக இருப்பதும் உறுதியாகியது. இந்த பீச்சர்களை மட்டுமே ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆனால், மற்ற பீச்சர்கள் அடுத்தடுத்து கசிய தொடங்கின. அதேபோல பட்ஜெட் விவரங்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. அதை இப்போது தெரிந்து கொள்வோம்.
ஒன்பிளஸ் 13எஸ் விலை (OnePlus 13s Price): சீன மார்கெட்டில் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.40,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இந்தியாவில் ரூ.50,000 முதல் ரூ.55,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஆரம்ப விலை மற்றும் சலுகைகள் போக ரூ.45,000 பட்ஜெட்டிலும் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த ஒன்பிளஸ் 13எஸ் போனில் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சீன வெர்ஷனில் (China Version) இந்த டாப்-எண்ட் வேரியண்ட் கிடைக்கிறது. இருப்பினும், இந்தியாவில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 512 ஜிபி போன்ற மிட்-ரேஞ்ச் வேரியண்ட்களும் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

50 எம்பி + 50 எம்பி ரியர் கேமரா செட்டப் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் எதிர்பார்க்கலாம். 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 6260mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ஆக்ஸிஜன் ஓஎஸ் கிடைக்கும். கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் டிஸ்பிளே பாதுகாப்பு கிடைக்க இருக்கிறது. பிளஸ் கீ பட்டனில் பல்வேறு யூடிலிட்டி பீச்சர்கள் பேக் செய்யப்பட இருக்கிறது.
சீன வேரியண்ட்டின் பீச்சர்கள் எப்படி இருக்கிறது? ஒன்பிளஸ் 13டி மாடலாக சீனாவில் வெளியாகி இது இருக்கிறது, இந்த ஒன்பிளஸ் 13எஸ் மாடல். சொல்லப்போனால், கலர் வேரியண்ட்களை தவிர மற்ற பீச்சர்கள் அப்படியே இருக்கின்றன. இதுவரை உறுதி செய்யப்பட்ட அத்தனை பீச்சர்களும் சீன வெர்ஷனுடன் ஒத்துப்போகிறது. ஆகவே, அதன் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
சீனாவில் ஐந்து வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஆரம்ப விலை மாடலாக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் இருக்கிறது. டாப்-எண்ட் மாடலாக 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது. இதற்கிடையில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கின்றன.
ஆரம்ப விலை மாடலானது ரூ.39,805 பட்ஜெட்டிலும், டாப் மாடலானது ரூ.52,690 பட்ஜெட்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. மிஸ்ட் கிரே, ஹார்ட் பவுண்டிங் பிங்க் மற்றும் கிளவுடி இன்ங் பிளாக் கலர்கள் இருக்கின்றன. இதில் மிஸ்ட் கிரே கலருக்கு பதிலாகவே இந்தியாவில் கிரீன் கலர் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. 6.32 இன்ச் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் உள்ளது.
மேலும், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் சிப்செட் மட்டுமல்லாமல், அதில் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியும் கிடைக்கிறது.
அதேபோல டெலிபோட்டோவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் ஆப்டிகல் ஜூமிங் கேபபிலிட்டி இருக்கிறது. ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. டால்பி விஷனுக்கு ஏற்ப டால்பி அட்மோஸ் ஆடியோ சப்போர்ட் உள்ளது. டைப்-சி ஆடியோ, IP65 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதே பீச்சர்களை ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








