Home
Mobile

OnePlus ஒரே போடு.. 16GB ரேம்.. SONY கேமரா.. 5850mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மினி ஸ்மார்ட்போனாக களமிறங்கி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலின் 16 ஜிபி ரேம் வேரியண்ட் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த வேரியண்ட்டின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகியபோது, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் மட்டுமே கிடைத்தன. இப்போது, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.68,999ஆக இருக்கிறது.

OnePlus ஒரே போடு.. 16GB ரேம்.. SONY கேமரா.. 5850mAh பேட்டரி!

இந்த விலையில் இருந்து ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும் இருக்கிறது. பீச்சர்களில் எந்த மாற்றமும் இல்லை.

ஒன்பிளஸ் 13எஸ் அம்சங்கள் (OnePlus 13s Specifications): 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் உள்ளது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) கிடைக்கிறது. 4 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கும்படி பாலிசி இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

இந்த கேமராவில் சோனி எல்ஒய்டி 700 (SONY LYT 700) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4K டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி ஆட்டோ போகஸ் செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. கேலக்ஸிகோர் ஜிசி32இ சென்சார் கிடைக்கிறது.

80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5850mAh பேட்டரி கிடைக்கிறது. இதுவொரு லைட் வெயிட் மாடலாக இருப்பதால், 185 கிராம் எடை மட்டுமே வருகிறது. ஆனால், 8.15 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.

IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 4 மைக்ரோபோன்களை கொடுத்துள்ளது. பிளாக் வெல்வெட் (Black Velvet) மற்றும் பிங்க் சாடின் (Pink Satin) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்இடி கனெக்டிவிட்டி கிடைக்கிறது. வை-பை 7 உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 13s With 16GB RAM Launched in India Under Rs 70000 Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X