Home
Mobile

Amazon ஒரே போடு.. 28 சதவீத ஆஃபரில் OnePlus.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026 (Amazon Great Indian Festival 2026) என்னும் சிறப்பு விற்பனையில் மிட்-ரேஞ்ச் பிரியர்களை தட்டித்தூக்கும்படியான தள்ளுபடி விலைக்கு ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் சிப்செட் கொண்ட இந்த மாடலின் விவரங்களை பார்க்கலாம்.

இப்போது அமேசான் தளத்தில் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 28 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.64,999 விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,750 தள்ளுபடி கிடக்கிறது. இது போக, 12 மாதங்களுக்கு நோ-கஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது.

Amazon ஒரே போடு.. 28 சதவீத ஆஃபரில் OnePlus.. 16GB ரேம்.. எந்த மாடல்?

ஈஎம்ஐ சலுகையில் வாங்கினால் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.61,999 விலைக்கு வாங்கலாம். பிளாக் வெல்வெட் (Black Velvet), பிங்க் சாடின் (Pink Satin) ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் இந்த ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்யலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படும்.

ஒன்பிளஸ் 13எஸ் அம்சங்கள் (OnePlus 13s Specifications): 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. 1.5K ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட இந்த டிஸ்பிளேவில் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் உள்ளது. கிராபிக்ஸ் அவுட்புட்டுக்கு அட்ரினோ 830 ஜிபியு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Snapdragon 8 Elite 4nm) சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) மூலம் இயங்குகிறது. மேலும், இந்த போனுக்கு 4 முக்கிய ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் சோனி எல்ஒய்டி 700 (Sony LYT-700) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) இடம்பெற்றுள்ளது. இதனுடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4K டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் வசதியும் இருப்பதால், வீடியோ எடுப்பவர்களுக்கு இந்த கேமரா பக்காவாக இருக்கும்.

செல்பீ மற்றும் வீடியோ காலிங் தேவைகளுக்காக 32 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கேலக்ஸிகோர் ஜிசி32இ (GalaxyCore GC32E) சென்சார் இடம்பெற்றுள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் 5850mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதை சீக்கிரம் சார்ஜ் செய்ய 80W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

இந்த போன் 185 கிராம் எடை மற்றும் 8.15 மிமீ தடிமன் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் கூடுதல் கட்டுப்பாட்டு வசதிகளுக்காக இன்பிராரெட் சென்சார் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதி உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 4 மைக்ரோபோன்கள் உள்ளன.

கனெக்டிவிட்டி அம்சங்களில் 5G SA/NSA, டூயல் 4G VoLTE மற்றும் வை-ஃபை 7 (Wi-Fi 7) ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக, சிறிய அளவிலான டிஸ்பிளே, சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் சிப்செட், 50 எம்பி டூயல் கேமரா செட்டப், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சாப்ட்வேர் அப்டேட் வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு ஒன்பிளஸ் 13எஸ் பக்காவான ஸ்மார்ட்போனாக உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 13s With 16GB RAM Gets Discount on Amazon Great Indian Festival 2026 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X