ஓட விட்ட OnePlus.. ரூ.8,000 விலை குறைப்பு.. 5850mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026 (Amazon Great Summer Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனுக்கு நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதனால், மார்கெட் விலையைவிட ரூ.8,000 கம்மியாக வாங்கி கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆக இருக்கிறது. இது மார்கெட் விலையான ரூ.54,999 விட ரூ.5,000 கம்மியாக இருக்கிறது. இந்த நேரடி விலை குறைப்பு மட்டுமல்லாமல், ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.8000 கம்மியாக வாங்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் இதே 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.51,490 விலைக்கு கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு அதிகபட்சமாக ரூ.3,250 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.48,240 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஆகவே, அமேசான் தளத்தில் கூடுதல் விலை குறைப்பில் கிடைக்கிறது.
இதுவொரு மினி போன் மாடலாக இருக்கிறது. ஆகவே, 6.32 இன்ச் டிஸ்பிளே மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஸ்லிம் மாடலாக இருக்காது. ஏனென்றால், 8.15 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. லைட் வெயிட்டில் இருக்கலாம். 185 கிராம் எடை மட்டுமே உள்ளது. ஒன் ஹேண்டில் யூசேஜ் செய்ய பக்காவான மாடலாக இருக்கும்.
2.5டி கர்வ்ட் கிளாஸ் கொண்ட மாடலாக இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தில் அலெர்ட் ஸ்லைடருக்கு பதிலாக கொடுக்கப்பட்ட பிளஸ் கீ (Plus Key) பீச்சரை இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இதுவொரு கஸ்டமைசபிள் பட்டனாக (customizable button) இருக்கிறது. ஏஐ டூல்கள், ஃபங்ஷன் பீச்சர்களை அணுக முடியும்.
வை-பை கனெக்டிவிட்டியின் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க ஜி1 வை-பை சிப்செட் கொடுக்கிறது. அக்வா டச் 2.0 (Aqua Touch 2.0) டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. இதற்கு ஏற்ப IP65 ரேட்டிங்குடன் டஸ்ட் ப்ரூப் மற்றும் வாட்டர் ப்ரூப் கொடுத்துள்ளது. பிளாக் வெல்வெட் (Black Velvet) மற்றும் பிங்க் சாடின் (Pink Satin) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்தியாவில் க்ரீன் சில்க் (Green Silk) கலரும் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 13எஸ் அம்சங்கள் (OnePlus 13s Specifications): 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொடுத்துள்ளது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிடைக்கிறது.
பக்காவான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கிடைக்கும். ஆனால், 4 ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 6 வருடங்களுக்கு செக்யூகிட்டி அப்டேட்கள் மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) கிடைக்கிறது.
50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி, டால்பி விஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. 80W சார்ஜிங், 5,850mAh பேட்டரி உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications