Home
Mobile

முரட்டு போனுக்கு ரூ.6,199 விலை குறைப்பு.. 12GB ரேம்.. 5850mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

காம்பாக்ட் டிசைனில் முரட்டு பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனுக்கு இந்திய மார்கெட்டில் நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. எந்தவொரு பேங்க் கார்டுகளும் இல்லாமலேயே மார்கெட் விலையில் இருந்து ரூ.6,199 விலை குறைப்பை பெற்று கொள்ளலாம். இந்த விலை குறைப்பு குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனானது, இந்திய மார்கெட்டில் வெளியாகியது. மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் களமிறங்கியதால், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆக இருந்தது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆக இருந்தது.

முரட்டு போனுக்கு ரூ.6,199 விலை குறைப்பு.. 12GB ரேம்.. 5850mAh பேட்டரி!

இப்போது, 8 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. அதேபோல ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனும் ஓரிரு மாதங்களில் வெளியாக இருக்கிறது. இதனால், நேரடி விலை குறைப்பில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. அதாவது, பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டானது ரூ.48,800 விலைக்கு கிடைக்கிறது.

இது ரூ.6,199 நேரடி விலை குறைப்பில் கிடைப்பதாகும். இதற்கு எந்த பேங்க் கார்டுகளும் தேவையில்லை. அதேபோல ரூ.59,999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டானது, இப்போது ரூ.56,168 விலைக்கு கிடைக்கிறது. இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடியும் கிடைக்கிறது.

ஆகவே, மேலும் மலிவான விலையில் இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். பிளாக் வெல்வெட் (Black Velvet), பிங்க் சாடின் (Pink Satin) மற்றும் கிரீன் சில்க் (Green Silk) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. பிளஸ் கீ (Plus Key) கன்ட்ரோல்களை கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் 13எஸ் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13எஸ் அம்சங்கள் (OnePlus 13s Specifications): ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது.

ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) மாடலாக இருக்கிறது. வீடியோ கலர் என்ஹான்சர் (Video Color Enhancer), ஸ்கிரீன் கலர் மோட் (Screen Color Mode) மற்றும் கலர் விஷன் என்ஹான்ஸ்மெண்ட் (Color vision Enhancement) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 4nm Snapdragon 8 Elite) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

கடந்த வருட மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கிறது. 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் உள்ளன. இந்த சிப்செட்டுடன் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கோமரா கிடைக்கிறது. சோனி சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி, 4K ரெக்கார்டிங் உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 6.32 இன்ச் காம்பாக்ட் டிஸ்பிளே கொண்ட பாடி இருந்தும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5850mAh பேட்டரி கிடைக்கிறது. IP65 ரேட்டிங் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13s With 12GB RAM 256GB Storage Price Dropped Available At Rs 48800 on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X