Home
Mobile

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த OnePlus 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஒன்பிளஸ் நிறுவனம் நாளை (ஜூன் 5) மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் போனின் சிறப்பு அம்சங்கள், விலை மற்றும் வெளியீட்டு நிகழ்வை எப்படிப் பார்ப்பது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜூன் 5-ம் தேதி மதியம் 12 மணி அளவில் ஒன்பிளஸ் 13எஸ் போனின் வெளியீட்டு நிகழ்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நிகழ்வை OnePlus India YouTube சேனல் மூலம் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த OnePlus 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்..

ஒன்பிளஸ் 13எஸ் அம்சங்கள் (OnePlus 13s specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் உடன் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் மேலும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

6.32-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2640 x 1216 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் இந்த ஒன்பிளஸ் போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளது. மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 4 மைக்ரோஃபோன்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளன.

குறிப்பாக IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் இந்த போனின் எடை 185 கிராம் ஆகும்.

ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15 மூலம் இந்த ஒன்பிளஸ் போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரTடன் இந்த புதிய ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

இந்த புதிய ஒன்பிளஸ் 13எஸ் 6260mAh பேட்டரி உடன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. அதேபோல் இந்த போனில் வசதியும் உள்ளது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.55,000 பட்ஜெட்டில் இந்த புதிய ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் 185 கிராம் எடையுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13s will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X