ஜூன் 5 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. வருகிறது புது OnePlus போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனை வரும் ஜூன் 5-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 13எஸ் அம்சங்கள் (OnePlus 13s specifications): 6.32-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2640 x 1216 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் உடன் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் மேலும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.
50எம்பி IMX906 மெயின் சென்சார் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளது. மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 4 மைக்ரோஃபோன்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளன.
IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் இந்த போனின் எடை 185 கிராம் ஆகும்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவடன் இந்த புதிய ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15 மூலம் இந்த ஒன்பிளஸ் போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6260mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. அதேபோல் இந்த போனில் வசதியும் உள்ளது.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.50,000-க்கு கீழ் இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








