OnePlus Mini போன்.. விலையை சொன்னா நம்புவீங்களா.. இந்தியாவில் OnePlus 13s ஆர்டர் தெறிக்குமே.. எப்போது?
சீனாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் "மினி ஸ்மார்ட்போன்" ஆக.. அதாவது "காம்பெக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஆனது.. சில மாதங்கள் (குறைந்தது 1 மாதம்) கழித்தே இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்றும்.. அதுவும் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. இது நினைத்ததை விட விரைவாக அறிமுகமாகும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம், இந்திய சந்தைக்கான ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, வண்ணங்கள் மற்றும் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் டீசர்களையும் வெளியிட்டு உள்ளது. இது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 13எஸ் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் (OnePlus 13s India Launch Timeline)? ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் "டீசர் இது விரைவில் அறிமுகமாகும்" என்பதை காட்டுகிறது. ஆக இது 2025 மே மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (OnePlus 13s Specifications and Features)? இது சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் ரீஃபிராண்டட் வெர்ஷன் ஆக இருந்தால்.. அதாவது "ஒரே அம்சங்களை கொண்ட ஆனால் மறுபெயரிடப்பட்ட வெர்ஷன்" ஆக இருந்தால்.. இரண்டுமே ஒரே மாதிரியான அம்சங்களைத்தான் பேக் செய்யும்.
ஒன்பிளஸ் 13டி முக்கிய அம்சங்கள் (OnePlus 13T Specifications):
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே
- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 4 மைக்ரோஃபோன்கள்
- டால்பி அட்மாஸ்
- அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ
- எடையில் 185 கிராம்.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் (OnePlus 13s Price Range in India)? ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை அல்லது ப்ரைஸ் ரேன்ஜ் (Price Range) குறித்த எந்த விவரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.39,700 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஆக ஒன்பிளஸ் நிறுவனத்தின் விலை நிர்ணய முறைகளின் அடிப்படையில், ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுமார் ரூ.45,000 முதல் 50,000 வரை என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இது தற்போது ரூ.42,999 என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் 13ஆர் ( OnePlus 13R) மாடலை விட சற்று அதிக விலகி வரும் . அதே சமயம் ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலை விட விலை குறைவானதாக இருக்கும்!


Click it and Unblock the Notifications








